Realme தனது பண்டிகை நாட்களுக்கான (Festive Season) முதல் விற்பனையை அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21, 2020 வரை தொடரும் என்று அறிவித்துள்ளது. விற்பனையின் போது, ​​வாடிக்கையாளர்கள் Realme C11, C12, C15, Realme 6, X3, X3 SuperZoom மற்றும் பலவிதமான ஆடியோ பாகங்கள், அணியக்கூடிய அக்சசரிகள், Realme ஸ்மார்ட் டிவி உட்பட பிற Realme AIoT தயாரிப்புகளில் தள்ளுபடி சலுகைகளைப் பெறலாம். இந்த சலுகைகள் Realme.com, Flipkart மற்றும் Amazon இல் ஆன்லைனில் மட்டுமே செல்லுபடியாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Realme C 11, 500 ரூபாய் தள்ளுபடியுடன் விற்கப்படும். இதன் மூலம் இதன் விலை 6999 ரூபாயாகக் குறையும். Realme C15 மற்றும் Realme 6 இரண்டுக்கும் ரூ. 1,000 தள்ளுபடி வழங்கப்படும்.


பிரீமியம் ஃபோன்களான Realme X3 மற்றும் Realme X3 Super Zoom ஆகியவற்றில் ரூ. 3,000 அளவிலான தள்ளுபடிகள் அளிக்கப்படும். 5 G –யால் இயக்கப்படும் Realme X50 Pro-வில் ரூ. 5000 தள்ளுபடி கிடைக்கும்.


ALSO READ: SBI வழங்கும் விழாக்கால சிறப்பு சலுகைகள்: விவரம் இதோ!!


வரவிருக்கும் பண்டிகை விற்பனையின் போது, ​​ Realme Buds Air Neo, Realme Buds Q, Realme Smart Band மற்றும் Realme Watch ஆகியவை அவற்றின் மிகக் குறைந்த விலைகளில் கிடைக்கும். முதல் முறையாக பட்ஸ் 3.0, 18W 10000 mAh power bank, 30W 10000mAh power bank மற்றும் Smart TV (32 inch மற்றும் 43 inch) ஆகியவற்றிலும் நிறுவனம் தள்ளுபடியை வழங்குகிறது.


தள்ளுபடியைத் தவிர, வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் சிறப்பு வங்கி சலுகைகளையும், பிளிப்கார்ட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளில் 6 மாத கட்டணமில்லாத EMI-யையும் பெறலாம். SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், Yono மற்றும் Flipkart.com ஆகியவற்றில் 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளில் HDFC கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் 10 சதவீத உடனடி தள்ளுபடி மற்றும் Amazon.com-ல் EMI வசதி ஆகியவையும் வழங்கப்படும்.


ALSO READ: Tech Guide: உங்கள் பழைய mobile-ஐ விற்க வேண்டுமா? பயனுள்ள சில குறிப்புகள் இதோ!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR