ஒரு வாரத்துக்கு கெட்டுப்போகாத மாம்பழம் பற்றி தெரியுமா? சுவாரஸ்யமான தகவல்
Alphonso mango Amazing Facts : வெளிநாட்டில் இருந்து இறக்குமதியான 500 ஆண்டுகள் பழமையான அல்போன்சா மாம்பழம் தான் ஒரு வாரத்துக்கு கெட்டுப்போகாது. இந்த மாம்பழத்தின் இன்னபிற தகவல்களை தெரிந்து கொண்டால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள்.
Alphonso mango Amazing Facts : எல்லோராலும் அதிகம் விரும்பப்படும் அல்போன்சா மாம்பழம் வெளிநாட்டு மாம்பழம் வகை. இது இந்தியாவுக்குள் இறக்குமதியான ஒன்று. கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் பழமையான இந்த மாம்பழத்தை அல்போன்சோ என்பது மட்டுமின்றி ஹாபஸ் அல்லது ஹஃபுஸ் என்றும் அழைப்பர். அல்போன்சா மாம்பழத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், பழுத்த ஒரு வாரத்திற்கு அது கெட்டுப் போகாது. அதனால்தான் இதை ஏற்றுமதி செய்வது மிகவும் எளிதாகிறது. இந்த மாம்பழம் டஜன் கணக்கில் விற்கப்படுகிறது. அதேநேரத்தில் இது மிகவும் விலை உயர்ந்தது. இந்த மாம்பழத்தின் விலை ரூ.1200 முதல் ரூ.2000 வரை இருக்கும்.
இந்த மாம்பழத்திற்கு அல்போன்சா என்ற பெயர் எப்படி வந்தது என்பது ஒரு சுவாரஸ்யமான கதை. அல்போன்சா என்பது ஆங்கில பெயர். போர்ச்சுகீசியர்கள் தான் இந்த பெயரை வைத்தர். 15 ஆம் நூற்றாண்டிலிருந்து போர்ச்சுகீசியர்கள் கோவாவை ஆண்டபோது, அப்பகுதியில் போர்ச்சுகலில் இருந்து அல்போன்சோ டி அல்புகர்க் என்ற வைசிராய் வந்துள்ளார். அவருக்கு தோட்டக்கலை மீது அளப்பரிய ஆர்வம். புதிய செடிகளை இறக்குமதி செய்து நடுவது தான் அவருடைய பொழுதுபோக்காவும் இருந்திருக்கிறது.
மேலும் படிக்க | செம்பு பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? இந்த பாதிப்புகள் ஏற்படும்!
அப்படி ஒருநாள் பிரத்யேகமாக மாம்பழச் செடி ஒன்றை ஆர்டர் செய்து கோவாவில் நட்டுள்ளார். அந்த செடிக்கு தன்னுடைய பெயரையே வைத்திருக்கிறார். அல்போன்சா என பெயரிடப்பட்டஅந்த செடியில் விளைந்த மாம்பழங்கள் எல்லாம் மிகவும் ருசியாக இருக்க, மளமளவென உள்ளூர் முழுவதும் அல்போன்சா மாம்பழ மரக்கன்றுகள் பல நடப்பட்டன. கொஞ்ச வருடங்களில் அல்போன்சாவும் இறந்துவிட அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அப்பகுதி மக்கள் அல்போன்சா நினைவாக, அவர் நட்ட செடிகளில் இருந்து வந்த பழங்களை எல்லாம் அல்போன்சா என அழைத்தனர். இதுதான் அல்போன்சா மாம்பழத்தின் சுவாரஸ்யமான பெயர் காரணம்.
இந்தியாவை பொறுத்தவரை பல மாநிலங்களில் அல்போன்சா மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன என்றாலும் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தின் ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க்கை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. மிகவும் ருசியான இந்த மாம்பழம் விலையும் அதற்கேற்ற தரத்தில் கூடுதலாக இருக்கும். இந்தியாவிலேயே சுவை மிகுந்த மாம்பழங்களின் வகைகளை பட்டியலிட்டால் அல்போன்சா மாம்பழம் டாப் மூன்று இடங்களில் இருக்கும். இந்த மாம்பழங்களை சரிவிகித அடிப்படையில் தினசரி சாப்பிட்டால் செரிமானம் சீராகும். குடல் ஆரோக்கியம் மேம்படும். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரான் அளவு அதிகரிக்கும். இது தவிர இன்னும் பல நன்மைகளும் இருக்கின்றன.
மேலும் படிக்க | சூரியன் அஸ்தமனத்துக்குப் பின் இந்த விஷயங்களை செய்யாதீங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ