Vastu Tips Tamil : சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றும் இந்து மதத்தில் எந்தவொரு செயலை செய்யவும் குறிப்பிட்ட காலங்கள் இருக்கின்றன. தினசரி வேலைகளிலும் காலை, மாலை வேளைகளில் செய்யக்கூடாத விஷயங்கள் இருக்கின்றன. அதாவது சூரிய உதயம் மற்றும் சூரியன் அஸ்தமனம் நேரங்களில் ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது. ஏனென்றால் அந்த நேரத்தில் அந்த விஷயங்களை செய்யும்போது குடும்பங்களுக்கு கஷ்டம், இழப்பு வரலாம் என்பது நம்பிக்கை. அந்தவகையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு செய்யக்கூடாத விஷயங்கள்.
இரவில் வீட்டை சுத்தம் செய்தல்
இரவு நேரங்களில் வீட்டை சுத்தம் செய்யக்கூடாது. சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு கட்டாயம் வீட்டை சுத்தம் செய்ய திட்டமிடாதீர்கள். இரவு நேரத்தில் வீட்டை துடைப்பதால் லட்சுமி தேவியின் அதிருப்தியை சந்திக்க நேரிடும். இதனால் வீட்டுக்கு வரும் செல்வம் தங்காமல் வறுமையும், கடனும் அதிகரிக்கும். வாஸ்து சாஸ்திரத்தின்படி இரவு நேரத்தில் வீட்டை சுத்தம் செய்வது நல்லதல்ல.
நகம் வெட்டக்கூடாது
காலையில் இருந்து பல்வேறு பணிகளுக்காக ஓய்வின்றி அலையும் மக்கள் மாலையில் தான் சற்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றனர். அந்தநேரத்தில், அதாவது இரவில் நகங்களை வெட்டுகின்றனர். உண்மையில் வாஸ்துபடி, இதனை மாலையில் செய்யக்கூடாது. இது எதிர்மறை ஆற்றலை வீட்டில் அதிகரிக்குமாம். வீட்டின் அமைதியை கெடுக்கும் இந்த வேலையை மாலையில் செய்யாதீர்கள்.
தானம் கொடுக்காதீர்கள்
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மஞ்சள், பால் அல்லது தயிர் தானம் செய்ய வேண்டாம். வாஸ்துபடி பார்த்தால், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு எந்த வகையான நன்கொடையும் கொடுக்கக்கூடாதாம். அதிலும் குறிப்பாக இந்த வகையான தானம் செய்வது நல்லதாக கருதப்படுவதில்லை. இப்படிச் செய்தால் வீட்டில் எதிர்மறைத் தன்மை வருவதோடு, வீட்டில் வறுமையும் கூடும்.
சுடுகாட்டுக்கு செல்லாதீர்கள்
இரவில் சுடுகாடு அருகே செல்வதையும் தவிர்க்க வேண்டும். இதற்குக் காரணம் அங்குள்ள எதிர்மறை ஆற்றல்கள் இருக்கும். இந்த ஆற்றல்கள் உங்களுக்கும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. எனவே எந்த சூழ்நிலையிலும் இரவில் இதுபோன்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
அதேநேரத்தில் பழங்காலத்தில் மின்சாரம் இல்லாததால் இரவு நேரத்தில் சில விஷயங்கள் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.அதாவது வெளிச்சம் இருக்கும்போதே எல்லா விஷயங்களையும் செய்துவிட வேண்டும் என்பது தான். இந்த அறிவுறுத்தல்களே காலப்போக்கில் ஐதீகமாகவும் மாறிவிட்டது என்று சொல்பவர்களும் உண்டு.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ