புதுடெல்லி: அமேசானின் டிஜிட்டல் குரல் உதவியாளர் (Amazon's digital voice assistant Alexa) அலெக்சா ஒரு சிறுமிக்கு கொடுத்த சேலஞ்ச் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன சேலஞ்ச் அது? 10 வயது சிறுமிக்கு பயங்கரமான 'பென்னி சேலஞ்ச்' செய்யச் சொன்ன அலெக்ஸா குறித்து சிறுமியின் தாயார் புகார் அளித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் அலிக்சா, ஒரு 10 வயது சிறுமியிடம் பயங்கரமான 'பென்னி சேலஞ்ச்' (penny challenge) செய்யச் சொன்னது. 2020 ஆம் ஆண்டில் சமூக ஊடக தளமான Tiktok இல் பென்னி சவால் வெளிவந்தது. இந்த சவாலில், மின் செருகியின் இரு முனைகளிலும் நாணயத்தை வைத்து நாணயத்தைத் தொடும் பணி வழங்கப்படுகிறது.


அலெக்சாவின் சவால் 
இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவில் வசிக்கும் சிறுமியின் தாயார் கிறிஸ்டின் லிவ்டால் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த சவாலைப் பற்றி சிறுமி அலெக்சாவிடம் கேட்டபோது, ​​​​முதலில் மொபைல் சார்ஜரை பாதி பிளக்கில் வைக்கவும், பின்னர் நடுவில் ஒரு நாணயத்தை வைத்து அதைத் தொடவும் என்று பதிலளித்ததாக அவர் கூறினார்.


இந்த சவால் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானது
அலெக்சாவின் பதிலைக் கேட்டதும், இந்த சவாலை செய்ய சிறுமி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அமேசான் நிறுவனத்திற்கு தெரிய வந்ததும், தவறை அது சரிசெய்துவொட்டது. 'தி பென்னி சேலஞ்ச்' என்று பெயரிடப்பட்ட இந்த ஆபத்தான சவால் ஒரு வருடத்திற்கு முன்பு டிக்டாக் மற்றும் பிற சமூக ஊடக வலைத்தளங்களில் (Social Media) பிரபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Also Read | வானத்தில் பருந்து பறக்கும்... ஆனால் மீன் பறக்குமா?


பெரிய இழப்பை ஏற்படுத்தும் சவால்கள் 
உலோகங்கள் மின்சாரத்தை கடத்துகிறது மற்றும் அவற்றை ஒரு நேரடி மின் சாக்கெட்டில் வைப்பது மின்சார அதிர்ச்சி, தீ பற்றுதல் மற்றும் பிற சேதங்களை ஏற்படுத்தும். இந்த சவாலை, சேலஞ்சாக செய்த பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு விரல்கள் மற்றும் கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.  


இது பற்றி, ஊடகங்களிடம் அமேசான் நிறுவனம் கொடுத்த அறிக்கையில், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்பாடுகளைத் தடுக்கும் வகையில் அலெக்சா டிஜிட்டல் குரல் உதவியாளர் (Amazon's digital voice assistant Alexa)புதுப்பிக்கப்பட்டுதுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


"வாடிக்கையாளர்களுக்கு ஊரு விளைவிக்கும் எதையும் அமேசான் செய்யாது. தவறு ஏற்பட்டால், அதை உடனடியாக திருத்திக் கொள்கிறோம். மக்களின் நம்பிக்கை மிகவும் அவசியமானது என்பதால், நாங்கள் செய்யும் எல்லாவற்றையும் கவனமாகவே செய்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு துல்லியமான, பொருத்தமான மற்றும் பயனுள்ள தகவல்களை வழங்கும் வகையில் Alexa வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைபாடு குறித்து எங்களுக்குத் தெரிந்தவுடன், உடனடியாக அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தோம்" என்று அமேசான் விளக்கம் அளித்துள்ளது.


Read Also | சிறுத்தையின் பிடியில் சிக்கிய நாய் பிழைத்ததா? திக் திக் வைரல் வீடியோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR