AViral Video: சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களைப் பார்த்தால் ஆச்சரியமும் சில சமயங்களில் அதிர்ச்சியும் ஏற்படுகிறது. வைரலாகும் ஒரு வீடியோவைப் பார்த்து மலைத்தால், அதையும் பின்னால் தள்ளி, வேறொரு சுவராசியமான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. எதைப் பார்ப்பது, எதை விடுவது என்ற சங்கடத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வித்தியாசமான ஆனால், வியப்பூட்டும் வீடியோக்கள் வைரலாகின்றன.
பறவை ஒன்று பெரிய மீனை அதன் நகங்களில் பிடித்துக்கொண்டு கடலுக்கு மேல் பறக்கும் வீடியோ சமூக வலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. வீடியோவில், மீன் காற்றில் பறப்பதைக் காணலாம், ஆனால் பறவை தனது இரையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டது. இந்த 25 வினாடி வீடியோ, வாட்ஸ்அப், ட்விட்டர் என பல்வேறு சமூக ஊடகங்களிலும் (Social Media) வைரலாகிறது.
சுறாவை சுமந்து செல்லும் கழுகு என்று சிலர் சிலர் தலைப்பு கொடுத்தால், வேறு சிலரோ கழுகின் பிடியில் இருந்த சுறாவின் நீளம் 11 அடி என்று கூறுகின்றனர்.
Ashley White from Erwin, TN took this video from her hotel balcony of an osprey with a large spanish mackerel in its talons! Some think it’s a condor with a great white. I like the way they think pic.twitter.com/myXn2lTTI1
— Ed Piotrowski (@EdPiotrowski) June 27, 2020
பெரிய மீனுடன் பறக்கும் கடல் பருந்து
உண்மையில் இந்த வீடியோ ஒன்றரை வருடங்கள் பழமையானது, தற்போது சமூக வலைதளங்களில் மீம்ஸ் பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது. பறவை ஒன்று, மீனை வலுவாகப் பிடித்துக் கொண்டு பறப்பதை வீடியோவில் காணலாம்.
பார்ப்பதற்கே பெரிதாக இருக்கும் அந்த மீன், குட்டி சுறா என்றும் மக்கள் கூறுகின்றனர். உண்மையில் அந்த மீன் சுறா இல்லை, ஒரு வகை மீன் ஆகும். கடலில் தூரத்திலிருந்தே தன் இரையைப் பார்த்த கடல் பருந்து, வேட்டையை அலேக்காக தூக்கிக் கொண்டு பறக்கத் தொடங்கியது. பருந்தின் பிடியில் மீனால் நழுவ முடியுமா? முடியாது...
ALSO READ | 'நாங்களும் விளையாடுவோம்’ - பனியில் சறுக்கி ஆட்டம் போடும் யானைகள்
வைரலான வீடியோ போலியா?
வைரலான வீடியோ முதலில் ஜூன் 27 அன்று @EdPiotrowski இன் ட்விட்டர் கைப்பிடியால் வெளியிடப்பட்டது. அவர் தனது ட்விட்டர் பயோவில் WPDE ABC-15 இன் தலைமை வானிலை ஆய்வாளர் மற்றும் ஒரு அமெச்சூர் புகைப்படக் கலைஞர் என்று எழுதியிருந்தார்.
WPDE ABC-15 என்பது தென் கரோலினாவை தளமாகக் கொண்ட ஒரு அமெரிக்க தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனம் ஆகும். ஒரு ட்விட்டர் பயனர் வீடியோவுக்கு அளித்த பின்னூட்டத்தில் இதை தெரிவித்துள்ளார்.
இர்வினின் ஸ்லே ஒயிட், இந்த வீடியோவை ஹோட்டலின் பால்கனியில் இருந்து படம்பிடித்ததாக சொல்கிறார். கடல் பருந்து தனது பாதத்தில் ஸ்பானிஷ் கானாங்கெளுத்தி மீனை எடுத்துச் சென்றதாக அவர் கூறினார். இந்த வீடியோ உண்மையானது என்றாலும், இதை நம்ப முடியாத சிலர் போலி என்று வதந்தி பரப்புவதாக அவர் கூறுகிறார்.
Read Also | சிறுத்தையின் பிடியில் சிக்கிய நாய் பிழைத்ததா? திக் திக் வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR