என்னைய பார்த்து குரைக்கிரயா.. நாயை கவ்விய சிறுத்தை -Viral Video

சிறுத்தையின் பிடியில் சிக்கிய நாயின் பலத்த போராட்டத்தைக் காட்டும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Dec 30, 2021, 04:38 PM IST
என்னைய பார்த்து குரைக்கிரயா.. நாயை கவ்விய சிறுத்தை -Viral Video title=

சிறுத்தையின் பிடியில் சிக்கிய நாய் பலத்த போராட்டத்திற்கு பிறகு தப்பி புதருக்குள் ஓடி மறையும் வீடியோ வைரலாகி வருகிறது.

குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் நள்ளிரவில் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே வனப்பகுதியை விட்டு ஒரு சிறுத்தை வெளியே வந்தது. 

பின்னர் அந்த சிறுத்தை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு உள்ள வீட்டு வளாகத்துக்குள் புகுந்தது. அப்போது அந்த வீட்டு வாசலில் கட்டி வைக்கப்பட்டு இருந்த நாய் (Dog) சிறுத்தையை பார்த்து குரைத்தது. 

இதனால்  அந்த நாய் மீது பாய்ந்த சிறுத்தை, அதன் கழுத்தில் கவ்வி இழுத்து சென்றது. பின்னர் சிறுத்தை அந்த நாயை கவ்வியபடி சுற்றுச்சுவரை தாண்ட முயற்சி செய்தது. அப்போது அந்த நாய் கேட்டில் உள்ள கம்பியில் மாட்டிக்கொண்டது. இதனால் நாயை அங்கேயே விட்டுவிட்டு சிறுத்தை அங்கிருந்து சென்றது. 

இந்த நிலையில் குன்னூர் தீயணைப்பு நிலையம் அருகே, சிறுத்தையிடம் சிக்கிய வளர்ப்பு நாய் உயிர் தப்பிய வீடியோ  வைரலாகி வருகிறது. சிறுத்தையின் பிடியில் சிக்கிய நாய் பலத்த போராட்டத்திற்கு பிறகு தப்பி புதருக்குள் ஓடி மறையும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி (Viral Video) வருகிறது.

ALSO READ | பாப் பாடகியின் மேதாவின் வாயை பதம் பார்த்த பாம்பு -அதிர்ச்சி வீடியோ!

ALSO READ | Viral Video: 'நாங்களும் விளையாடுவோம்’ - பனியில் சறுக்கி ஆட்டம் போடும் யானைகள்..! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News