அமேசான் நிறுவனம் தங்களது ஆண்டு விழாவிற்கான விற்பனையை தொடங்கி விட்டது. இந்த ஆண்டிற்கான The Great Indian Festival விரைவில் தொடங்க உள்ளது. இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தளங்களுள் ஒன்றாக இருப்பது, அமேசான். The Great Indian festival 2023 விற்பனை விரைவில் தொடங்க உள்ளது. இந்த விற்பனை தொடங்க உள்ள தேதி விரைவில் தெரிவிக்கப்பட உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்..!


The Great Indian festival 2023 விற்பனை தேதி அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஆரம்பிக்கப்பட உள்ளது. ஆனால், அமேசான் பிரைம் வாடிக்கையாளராக இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு விழாவிற்கான விற்பனை முன்கூட்டியே தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், 299 ரூபாயில் இருந்து 1,499 ரூபாய் வரை அமேசான் பிரைம் வாடிக்கையாளராக இருப்பவர்கள் இந்த வாய்பை பயன்படுத்தி முன்கூட்டியே பல பொருட்களை ஆஃபரில் The Great Indian festival 2023 விற்பனையின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், பொதுவான வாடிக்கையாளர்களுக்கு இல்லாத பல ஆஃபர்கள், பிரைம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | Flipkart Big Billion Days Sale 2023: பிளிப்கார்ட் அளவில்லா சேல்.. இதோ விவரம்


ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் ஆண்டு விழா விற்பனையை தொடங்க உள்ளது. இந்த விற்பனையில், அந்நிறுவனம் ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப் உள்ளிட்ட பல கேட்ஜெட்ஸ்களுக்கு பம்பர் ஆஃபர்களை கொடுத்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் முன்னணி செல்ஃபோன் ப்ராண்ட் நிறுவனங்களான, சாம்சங், நத்திங், சியோமி உள்ளிட்ட போன்களுக்கு பல அதிரடி ஆஃபர்கள் காத்துக்கொண்டுள்ளன. 


அமேசான் விற்பனை தொடங்குவது எப்போது..? 


அமேசான் நிறுவனம், அடுத்த மாதம் (அக்டோபர்) 10ஆம் தேதி இந்த ஆண்டிற்கான விற்பனையை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் பலர் ஸ்மார்ட் போன்கள், லேப்டாப்புகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் என பல பொருட்களை வாங்குவதற்காக ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். 


Flipkart நிறுவனம், ஐபோன்கள் உள்ளிட்ட பல டிவைஸ்களுக்கு தள்ளுபடிகளை அள்ளி வழங்க உள்ளது. கடந்த ஆண்டு, ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 தொடர் போன்களுக்கு பல சலுகைகளை அந்த நிறுவனம் வழங்கியிருந்தது. இந்த ஆண்டும் அதே போல பல ஆஃபர்களை வழங்கப்படும் என வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அக்டோபர் 1ஆம் தேதி ஐபோன்களுக்கான சலுகைகளை அறிவிக்க உள்ளது. ஐபோனை அடுத்து சாம்சங், போகோ, ரியல்மீ போன்ற போன்களின் விற்பனை அடுத்தடுத்த தேதிகளில் தொடங்கப்பட உள்ளன. 


மேலும் படிக்க | Amazon Great Indian Festival Sale: எக்கச்சக்க தள்ளுபடிகள்... அமேசான் சேல் எப்போது தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ