Amazon Great Freedom Festival Sale 2022: அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை அறிவிக்கப்பட்டது: அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் அபாரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிற பொருட்களுக்கான பெரிய விற்பனையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அமேசான். அடுத்த வாரம் தொடங்கும் தள்ளுபடி விற்பனைய்ல் ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 10 வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.
கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் அமேசான் 2022
அமேசான் பிரைம் டே விற்பனை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, நிறுவனம் இப்போது ஆகஸ்ட் மாதத்திற்கான அடுத்த பெரிய விற்பனையை அறிவித்துள்ளது. அமேசான் அடுத்த மாதம் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையை நடத்துகிறது, இது பல்வேறு வகைகளில், பல தயாரிப்புகளுக்கு தள்ளுபடியைக் கொடுக்கிறது. புதிதாய் அறிமுகமான ஃபோன்கள், டிவிக்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்களுக்கான தள்ளுபடிகள் இதில் அடங்கும்.
அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை தேதி மற்றும் வங்கி சலுகைகள்
தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவலில் SBI வங்கி கிரெடிட் கார்டுகளுடன் வாங்குபவர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறுவார்கள். பிளாட்ஃபார்மில் புதிதாக வாங்குபவர்கள் முதல் முறையாக வாங்கும் போது 10 சதவீத கேஷ்பேக் பெறுவார்கள்.
கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் சலுகைகள்
அமேசான் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பாகங்கள் மீது 40 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது. சில ஆரம்ப நிலை போன்கள் ரூ.6,599க்கு கிடைக்கும்.
அடுத்த மாதம், சுதந்திர தின விழா விற்பனையில் விற்பனைக்கு வரும் புதிய வெளியீடுகளில் OnePlus 10T மற்றும் iQOO 9T சலுகைகளும் அடங்கும். இரண்டு போன்களும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் மற்றும் இந்த விற்பனையில் Amazon இல் பிரத்தியேகமாக விற்கப்படும்.
இது தவிர, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi K50i 5G அதன் இரண்டாவது விற்பனைக்கு கார்டு தள்ளுபடிகள் மற்றும் பரிமாற்ற சலுகைகளுடன் வாங்கலாம் என்றும், அதன் விலை 20,999 என்றும் கூறப்படுகிறது.
Samsung Galaxy M13, iQOO Neo 6 5G, Tecno Camon 19 Neo மற்றும் Tecno Spark 9 ஆகியவையும் இந்த விற்பனையில் வாங்குவதற்கு கிடைக்கும். இந்த சாதனங்களில் கார்டு தள்ளுபடிகளை வாங்குபவர்கள் எதிர்பார்க்கலாம். ஸ்மார்ட்போன் வாங்கும் போது வாங்குபவர்கள் நோ-காஸ்ட் EMI-ஐயும் பெற முடியும்.
இந்த விற்பனையில் ஸ்மார்ட்வாட்ச்கள், கேமிங் ஆக்சஸரீஸ், TWS இயர்பட்ஸ் மற்றும் கேமராக்கள் ஆகியவற்றிலும் தள்ளுபடிகள் இருக்கும். Boat Airdopes 121 Pro TWS இயர்பட்ஸ் மற்றும் GoPro Hero 10 பண்டில் போன்ற புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் பிரபலமான சில சாதனங்களும் வாங்குவதற்குக் கிடைக்கும்.
அமேசான் அலெக்சா, கிண்டில் மற்றும் ஃபயர் டிவி ஸ்டிக் போன்ற ஸ்மார்ட் ஹோம் சாதனங்களில் வாங்குபவர்களுக்கு 45 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.
மடிக்கணினிகளில் சிலவற்றுக்கு 40,000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். HP Victus 2022 மாடல் மற்றும் LG கிராம் சீரிஸ் போன்ற சில புதிய லேப்டாப்கள் விற்பனைக்கு வரும்.
இந்தியாவில் அமேசானின் மிகப்பெரிய போட்டி பிளிப்கார்ட் ஆகும். Flipkart நிறுவனமும், தனது சூப்பர் சேவிங் டேஸ் விற்பனையை ஆகஸ்ட் 6 முதல் தொடங்க திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ