அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் உலகின் மிக நீளமான கால்கள் கொண்ட பெண்ணாக கின்னஸ் உலக சாதனை (Guinness World Record) படைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

6 அடி மற்றும் 10 அங்குலங்களில் பெருமையுடன் நிற்கும் மேசி குர்ரின் (Maci Currin), இதற்கு முன்ன்னர் முன்னிடத்தில் இருந்த ரஷ்ய கூடைப்பந்து வீராங்கனை எகடெரினா லிசினாவை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.


வரவிருக்கும் ஆண்டுகளில் ஒரு மாடலாக மாற விரும்பும் ஆஸ்டினைச் (Austin) சேர்ந்த இந்த இளம் பெண், நீண்ட கால்கள் இருப்பதில் சில எதிர்மறை விளைவுகளும் உள்ளன என கூறுகிறார். ஆனால் தனது உயரமும் அழகும் தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றும் கூறுகிறார் அவர்.


"இதுபோன்ற நீண்ட கால்களைக் கொண்டிருப்பதில் நிச்சயமாக எதிர்மறையான விளைவுகளும் பல உள்ளன. கதவுகள் வழியாக நடக்கும் போது தலையை இடித்துக்கொள்ள நேரிடலாம். நமக்கேற்ற பொருத்தமான ஆடைகளைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான வேலையாக இருக்கும். ஆனால், இதனால் கவலைப் படவோ, இதை மறைக்கவோ முயற்சிக்க வேண்டாம். உங்களிடம் இப்படி ஏதாவது தனித்துவம் இருந்தால் அதை பெருமையுடன் தழுவிக்கொள்ளுங்கள்.” என்கிறார் அவர்.


அவரது குடும்பத்தில் மேசி மட்டும் உயரமானவர் அல்ல. அவரது தந்தை கேமரூன் 6 அடி 5 இன்சுகள் உயரம் உடையவர். அவரது சகோதரர் ஜேக்கப் 6 அடி 3இன்ச் உயரம் கொண்டவர்.


ALSO READ: Nobel Prize 2020: ஹெபடைட்டிஸ் சி வைரஸை கண்டறிந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு


மேசி 9 வயதாக இருந்தபோதே அவரது உயரம் 5 அடி 7இன்சாக ஆக இருந்தது.


தற்போது உலகிலேயே நீளமான கால்களுக்கான சாதனை மேசியிடம் உள்ளது. ஆனால், தற்போது இருக்கும் பெண்களில் உயரமான பெண் என்ற சாதனைச் செய்ய அவர் இன்னும் சற்றும் உயரத்தை அதிகரிக்க வேண்டும். தற்போது இந்த பட்டம் சீனாவைச் சேர்ந்த சன் ஃபேங்கிடம் உள்ளது. அவரது உயரம் 7 அடி 3 இன்சாகும்.


நீளமான கால்களுக்காக மேசியைப் போலவே சமீபத்தில் மற்றொருவரும் பிரசித்தி பெற்றார். அவர் பெயர் ரென்ட்சென்கோர்லூ பட். மங்கோலியப் பெண்ணான இவரது உயரம் 6 அடி 9 அங்குலமாகும். இவர் அமெரிக்காவில் (America) வசிக்கிறார், ஆனால் மங்கோலியாவைச் சேர்ந்தவர். இவர் இந்த உயரத்திற்கான மரபணுக்களை தன் பெற்றோரிடமிருந்து பெற்றுள்ளார். அவரது தந்தையின் உயரம் 6 அடி 10 அங்குலம், தாயின் உயரம் 6 அடி, 1 அங்குலம்.


பலவித கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல்களால் பெரும்பாலும் சிதைந்துபோன ஒரு சவாலான குழந்தைப்பருவத்தைக் கொண்டிருந்த அவர், தனது தனித்துவமான உயரத்தின் காரணமாக இளமைப் பருவத்தில் ஒரு மாடலானார். இப்போது தன் உயரத்தை நேசிக்கும் அவர், “உயரம் அழகானது” என்கிறார். 


ALSO READ: 2021 நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டார் அமெரிக்க அதிபர் Donald Trump!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR