அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் சரியான துணை கிடைக்காமல் மிகுந்த மன உழைச்சலில் உள்ளார். ஆனால் அவர் தனது தேடலை நிறுத்துவதாக இல்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் (America) 56 வயதான பெண்ணான கேசி  என்பவர் இதுவரை 10 திருமணங்களைச் செய்துள்ளார், ஆனால் அவருக்கு இதுவரை பொருத்தமான கணவர் அல்லது  'Mr.Right'  கிடைக்கவில்லை. அவர் இன்னும் பொருத்தமான துணையின் தேடலில் உள்ளார். இப்போது அவர் தனது 11 வது கணவரை தேடுகிறார். கேசி ஒரு 'தகுதியான மணமகனை' கண்டுபிடிக்கும் வரை தொடர்ச்சியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்.


சமீபத்தில் தனது 10 வது கணவரை விவாகரத்து செய்த கேசி, இதுவரை இத்தனை திருமணங்களைச் (Marriage) செய்து கொண்டது குறித்து சிறிதும் கவலைப்படவில்லை. அவரது விருப்பம் ஒரு தகுதியான கணவரை தேர்தெடுப்பது  மட்டுமே. கேசியின் மிக நீண்ட காலம் நீடித்த ஒரு திருமணம் எட்டு ஆண்டுகள் நீடித்தது, மிகக் குறுகிய காலம் ஆறு மாதங்கள்.


அமெரிக்காவை (US) சேர்ந்த கேசி சில நாட்களுக்கு முன்பு, திருமண உறவை எப்படி வெற்றிகரமாக பராமரிப்பது என்பது குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அது தொடர்பான வழிகளைக் கற்றுக்கொண்டார். 


கேசியின் முதல் திருமண வாழ்க்கை எட்டு ஆண்டுகள் நீடித்தது . இரண்டாவது திருமணம் ஏழு ஆண்டுகள் நீடித்தது. மூன்றாவது திருமணம் சுமார் இரண்டரை ஆண்டுகள் நீடித்தது. இவருக்கு மூன்றாவது கணவர் மூலம் ஒரு மகன் இருக்கிறான். கணவன் அவளிடம் “ஐ லவ் யூ” சொல்வதை நிறுத்தியதால் இருவருக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டது. 


மேலும் படிக்க | அதிகம் இல்லை... வெறும் 86 ரூபாய்க்கு வீடு வாங்கலாம்.. எங்கே தெரியுமா..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR