உலகில் வெகு சிலரிடம் மட்டுமே உள்ள இந்த வாட்ச்! விலை 18 கோடி! அப்படி என்ன ஸ்பெஷல்?
Richard Mille Luxury Watch: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழாவில் ஆனந்த் அம்பானி அணிந்து இருந்த வாட்ச் தற்போது வைரல் ஆகி வருகிறது.
Richard Mille Luxury Watch: இந்தியா மற்றும் உலகின் நாட்டின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக முகேஷ் அம்பானியின் குடும்பம் உள்ளது. அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறை பலரையும் பிரமிக்க வைக்கும். இதன் காரணமாகவே அம்பானி குடும்பம் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும். அவர்கள் குடும்பத்தில் ஏதேனும் விசேஷங்கள் நடைபெற்றலோ அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலோ அனைவரது பார்வையும் அவர்கள் மீது தான் இருக்கும். பொதுவாக திருமணங்களை பிரமாண்டமாக நடத்தினால் அம்பானி வீட்டு திருமணம் போல இருக்கிறது என்று கூறுவார்கள். அப்படி இருக்கையில் அம்பானி வீட்டிலேயே திருமணம் நடைபெற்றால் அது எவ்வளவு பிரமாண்டமாக இருக்கும்? அவர்கள் வீட்டில் நடக்கும் சிறு விசேஷங்கள் தொடங்கி, திருமண விருந்துகள் வரை மிகவும் ஆடம்பரமாக கொண்டாடுவார்கள்.
மேலும் படிக்க | Split AC Vs Window AC... உங்களுக்கான சிறந்த ஏசி எதுவாக இருக்கும்..!!
இப்படி நடக்கும் நிகழ்ச்சிகள் பொதுவெளியில் பல நாட்கள் விவாதிக்கப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முன்பு நடந்த நிகழ்ச்சி அனைவராலும் பேசப்பட்டது. அப்போது அம்பானி குடும்பத்தை சேர்ந்தவர்கள் அணிந்து இருந்த உடை, நகை, ஷூ என சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிதாக பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆனந்த் அம்பானி உலகிலேயே ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கும் வாட்ச் ஒன்றை அணிந்து இருந்தார். இந்த லிமிடெட் எடிஷன் வாட்சின் விலை ரூ.18 கோடி ஆகும்.
ரூ. 18 கோடி மதிப்புள்ள வாட்ச்
ஆனந்த் மற்றும் ராதிகா ஆகியோரது திருமணத்திற்கு முந்தைய விழா கடந்த மார்ச் மாதம் குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அவை அனைத்தையும் தாண்டி ஆனந்த் அம்பானி அணிந்து இருந்த வாட்ச் பற்றி பலரும் பேசி வந்தனர். பிரபல சமூக ஊடக தளமான பேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி கூட அவரது வாட்சை பார்த்து திகைத்து போய் நின்றார்கள். எனக்கு வாட்ச் அணிய பிடிக்காது, ஆனால் இந்த வாட்சை பார்த்தால் அணிய வேண்டும் என்று தோன்றுகிறது என்று கூறி இருந்தார் ஜூக்கர்பெர்க்.
Richard Mille's white sapphire RM 56-02 என வாட்சை தான் ஆனந்த் அம்பானி அணிந்திருந்தார். இதன் விலை மற்றும் மாடல் மிகவும் தனித்துவமானது, உலகில் 10 பேர் மட்டுமே இந்த மாடல் வாட்சை வைத்துள்ளனர். எனவே தான் ரூ.18.2 கோடி மதிப்பிலான இந்த வாட்சை பார்த்தால் அனைவருக்கும் ஆசை வரும். இந்த வாட்சில் சபையர் படிக உறை உள்ளது, அதே சமயம் இது டைட்டானியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புற தோற்றம் ஒரு கம்பீரமான அமைப்பை கொடுக்கும். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் சிறுவயதிலிருந்தே நண்பர்கள் என்று கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இருவரும் ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
மேலும் படிக்க | பார்லர் செல்ல தேவையில்லை... அழகிய நீண்ட கூந்தலை பெற சில டிப்ஸ்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ