குழந்தை பேறு முதல் மன நலன் வரை... தாமதமாகும் திருமணங்களால் ஏற்படும் பல பிரச்சனைகள்..!!

திருமணங்கள் சொர்க்கத்தில் செய்யப்படுகின்றன என்று கூறப்படுவது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால் இன்றைய காலகட்டத்தில் சரியான நேரத்தில் திருமணம் செய்து வைப்பது சவாலாக மாறி வருகிறது. இதன் காரணமாக ஆண் மற்றும் பெண்களின் திருமண வயது அதிகரித்து வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 11, 2024, 05:08 PM IST
  • திருமணத்திற்கு முன்பு தங்களை பொருளாதார ரீதியாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள்.
  • தாமதமாக திருமணம் செய்யும் போக்கு சாதாரணமாகி வருகிறது.
  • மேற்கத்திய உலகத்தை பார்த்து, வயதான காலத்தில் திருமணம் செய்யும் போக்கு நம் நாட்டில் அதிகரித்து வருகிறது.
குழந்தை பேறு முதல் மன நலன் வரை... தாமதமாகும் திருமணங்களால் ஏற்படும் பல பிரச்சனைகள்..!! title=

திருமணங்கள் சொர்க்கத்தில் செய்யப்படுகின்றன என்று கூறப்படுவது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால் இன்றைய காலகட்டத்தில் சரியான நேரத்தில் திருமணம் செய்து வைப்பது சவாலாக மாறி வருகிறது. இதன் காரணமாக ஆண் மற்றும் பெண்களின் திருமண வயது அதிகரித்து வருகிறது, மறுபுறம், தொழில், குறிக்கோள், இலக்கு என காரணம் காட்டி தாமதமாக திருமணம் செய்பவர்களும் உள்ளனர். இந்த மாறிவரும் போக்கு சமூகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

நம் நாட்டில் முன்பு சரியான திருமண வயது 24-25 ஆகக் கருதப்பட்டது. தற்போதைய சட்டத்தில், இந்து திருமணச் சட்டம் 1955ன் கீழ், பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும், ஆணுக்கு 21 ஆகவும் இருக்க வேண்டும். நம் நாட்டில் குழந்தை திருமணம் ஒரு தீவிர பிரச்சனையாக இருந்தபோது, அதனை தடுக்க அரசாங்கம் இந்த சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் இன்று மாறிவரும் சமூகத்தில் நிலைமை நேர்மாறாக உள்ளது, குறிப்பாக நகரங்களில், இளமையில் திருமணம் செய்வதற்கு பதிலாக தாமதமாக திருமணம் செய்யும் போக்கு சாதாரணமாகி வருகிறது.

இன்று திருமணங்கள் இரண்டு காரணங்களால் தாமதமாகின்றன, அதில் ஒன்று தனிப்பட்ட விருப்பம். சிலர் திருமணத்திற்கு முன்பு தங்களை பொருளாதார ரீதியாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள். தங்கள் சொந்த காலில் நிற்க விரும்புகிறார்கள். ஆனால் இதனை அடையும் போது, அவர்களது வயது 30-35 வயதை எட்டி விடுகிறது. இதனால் பல விதத்தில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மேற்கத்திய உலகத்தை பார்த்து, வயதான காலத்தில் திருமணம் செய்யும் போக்கு நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. இன்று உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது நாட்டில்தான் அதிக இளைஞர்கள் உள்ளனர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இளைஞர்களின் சதவீதம் மிகக் குறைவு, ஆனால் தாமதமாக திருமணம் செய்யும் போக்கு அதிகரித்து வருவதால், நம் நிலைமையும் வெளிநாடுகளைப் போல மாறி, நமது இளைஞர்களின் சதவீதம் குறையத் தொடங்கும். இது எதிர்காலத்தில் கடுமையான பிரச்சனையாக மாறலாம். இதன் காரணமாக பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை காணலாம். வரவிருக்கும் 10-15 ஆண்டுகளில், 15 முதல் 20 வயது குழந்தையின் தந்தை வயது 60ஆக இருப்பதை பார்க்கலாம். அதோடு, குழந்தைகள் பள்ளி படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே, பெற்றோர் ஓய்வு பெறும் நிலை ஏற்படும்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான பம்பர் திட்டம்: ஜாக்பாட் வட்டி, அசத்தலான வருமானம்

காலதாமதமான திருமணத்தால், மலட்டுத்தன்மை மற்றும் கருச்சிதைவு போன்ற பிரச்சனைகள்,  ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதாகி வருகிறது. இன்று IVF சிகிச்சை பெற பல தம்பதிகள் மருத்துவர்களை நாடுகின்றனர் . ஒவ்வொரு ஜோடியும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில் திருமணத்தை தாமதப்படுத்தும் நிலையில், வயது அதிகரிக்கும் போது, ​​இளைஞர்களின் கருவுறுதல் திறன் பாதிக்கப்படுவதால், பெரும்பாலான தம்பதிகள் தங்கள் கருவுறுதல் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

தாமதமாகும் திருமணத்தில் மரபணு கோளாறுகள் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இந்த பிரச்சனைகள் வயதுக்கு ஏற்ப அதிகரிக்கத் தொடங்குகின்றன. இன்று இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் மிகவும் பொதுவானவை. அத்தகைய சூழ்நிலையில், தம்பதியினர் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், குழந்தை எப்படி ஆரோக்கியமாக இருக்கும். தற்போது, ​​வயதான தம்பதிகளுக்கு ஆரோக்கியமான முட்டை மற்றும் விந்தணுக்கள் இல்லாததால், குழந்தைகளிடம் குரோமோசோம் குறைபாடுகள் அதிகம் காணப்படுகின்றன. ஏனெனில் 30 வயது வரை ஆண் மற்றும் பெண்களின் முட்டை மற்றும் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருப்பதால், அதன் மூலம் ஆரோக்கியமான குழந்தை பிறக்க முடியும், ஆனால் வயது அதிகரிக்கும் போது, ​​முட்டை மற்றும் விந்தணுக்களின் தரம் பாதிக்கப்படும்.

எப்போது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம், ஏனெனில் திருமண முடிவு ஒருவரின் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவு. எனவே, ஒரு நபர் இந்த முடிவை மிகவும் சிந்தனையுடன் எடுக்க வேண்டும். இந்த முடிவு குடும்ப சூழ்நிலைகள் மற்றும் தனிப்பட்ட தேர்வு ஆகிய இரண்டையும் சார்ந்துள்ளது, ஆனால் இந்த அனைத்து அம்சங்களையும் மனதில் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

மேலும் படிக்க | 7.75% வரை வட்டி தரும் HDFC வங்கி! எந்தத் தொகைக்கு எவ்வளவு வட்டி உயர்ந்தது? லேட்டஸ்ட் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News