தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் அஸ்டா சிஎன்ஜி மாறுபாட்டை ரூ.8.45 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோல் மேனுவல் கிராண்ட் ஐ10 நியோஸ் அஸ்டாவை விட இது ரூ.92,000 அதிகமாகும். முன்னதாக, அதன் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி வகைகள் சந்தையில் அறிமுகம் ஆனது, அவை முறையே ரூ.7.16 லட்சம் மற்றும் ரூ.7.70 லட்சம் ஆகும். இந்த இரண்டு மாடல்களும் அவற்றின் பெட்ரோல் பதிப்பை விட சுமார் ரூ. 1 லட்சம் விலை அதிகமாகும். புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் அஸ்டா சிஎன்ஜி மாடலில் முந்தைய மாடலை விட எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல் மாறுபாட்டைப் போலவே, இது சரிசெய்யக்கூடிய பின்புற ஹெட்ரெஸ்ட், புஷ் பட்டன் ஸ்டார்ட், ரியல் வைப்பர், லக்கேஜ் லேம்ப், ரியல் குரோம் கார்னிஷ், டோர் ஹாண்டில்ஸ் வெளியே குரோம் மற்றும் பார்க்கிங் லீவர் டிப்பில் குரோம் ஃபினிஷ் உடன் கிடைக்கிறது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் வாய்ஸ் ரேகிரேஷிவன் உடன் கூடிய 8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 5.3 இன்ச் செமி டிஜிட்டல் மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, லெதர் ரேப்டு ஸ்டீயரிங், ஆர்காமிஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் கூல்டு க்ளோவ் பாக்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது.


மேலும் படிக்க | EV6 Launch of KIA: இந்தியாவுக்கு 100 கார்கள் மட்டுமே விற்பனைக்கு


பவர்காக, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஆஸ்டா சிஎன்ஜி 1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சினைப் பயன்படுத்துகிறது, இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 95.2 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்கும். இருப்பினும், பெட்ரோல் மாடலுடன் ஒப்பிடும் போது, ​​சிஎன்ஜி மாறுபாட்டின் பவர் மற்றும் முறுக்கு விசைகள் முறையே 14 பிஎச்பி மற்றும் 19 என்எம் குறைவாக உள்ளது. ஆனால், பெட்ரோல் மாடலை விட அதிக மைலேஜ் இது தரும்.


இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜி கார்கள்
இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் 5 சிஎன்ஜி கார்களில் 4 மாருதியை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மாருதி சுசுகி செலிரியோ சிஎன்ஜி, வேகன் ஆர், ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ ஆகியவை அடங்கும். அதே நேரத்தில், ஹூண்டாய் சான்ட்ரோ சிஎன்ஜி ஐந்தாவது இடத்தில் உள்ளது, இது 30.48 கிமீ மைலேஜ் தரக்கூடியது.


மேலும் படிக்க | இந்தியாவில் ரூ 59.95 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது KIA EV6


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ