காரை துவம்சம் செய்த குரங்குகள்! வைரலாகும் வீடியோ!

குரங்குகள் கார்களின் பாகங்களை சேதப்படுத்தும் சில காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jun 30, 2022, 05:02 PM IST
  • காரை சுக்குநூறாக்கும் குரங்கின் சேட்டை.
  • நம்பர் பிளேட்டை உடைத்து நொறுக்குகின்றன.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
காரை துவம்சம் செய்த குரங்குகள்! வைரலாகும் வீடியோ!  title=

சிறிய குழந்தைகள் ஏதேனும் சேட்டை செய்தால் அவர்களை பெரியவர்கள் குரங்கு போல சேட்டை செய்யாதே என்று அதட்டுவார்கள், ஏனெனில் குரங்குகள் பயங்கரமாக சேட்டை செய்யும்.  குரங்ககளின் அதிகப்படியான சேட்டை செய்யும் காட்சி ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.  குரங்கின் குறும்பு தனத்தால் சில பொருள் இழப்பீடுகளும் ஏற்பட்டுள்ளது, ஒருபுறம் இந்த சம்பவம் அதன் உரிமையாளருக்கு வருத்தத்தையும், நஷ்டத்தையும் அளித்தபோதிலும், மறுபுறம் குரங்கின் குறும்பு பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கிறது.  ஐந்தறிவு கொண்ட விலங்குகள் என்பதால் அவற்றிற்கு விலையுயர்ந்த பொருட்கள் பற்றிய போதுமான விழிப்புணர்வு அதனிடம் இல்லை.

car

மேலும் படிக்க | தாயை இழந்த மாணவனுக்கு தோழர்களின் ஆறுதல்: இணையத்தை அழ வைத்த வைரல் வீடியோ

இந்த வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில், இரண்டு குரங்கு குட்டிகள் மெதுவாக காரின் பின்புறமாக ஏறிக்கொண்டு நிற்பதை காண முடிகிறது.  பின்னர் அந்த குரங்கு குட்டிகள் இரண்டும் காரின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள நம்பர் பிளேட்டை மெதுவாக உடைத்து எடுக்கிறது, அது தெரியாமல் அந்த வாகன ஒட்டி காரை ஒட்டி செல்கிறார்.  அடுத்ததாக ஒரு குரங்கு குட்டி காரின் பின்புறத்தில் உள்ள வைபரை பிடித்து தொங்குகிறது, பிறகு சிறிது அந்த வைபர் உடைந்து கீழே விழுவதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.

 

இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை அறுபத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க | டூவிலருடன் சேர்த்து போட்டப்பட்ட ரோடு; வைரலாகும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News