Anti-Ageing Tips: அழகான, மாசு மரு இல்லாத சருமத்தை பெற பலர் பெரும் தொகையை செலவழிக்கிறார்கள். இறுக்கமான, களங்கமற்ற சருமத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் உணவுகள் பற்றிய ஆயிரக்கணக்கான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடைக்கின்றன. இருப்பினும், உங்கள் காலை உணவில் நன்மை பயக்கும் உணவுகளைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டும் நாம், பல சமயங்களில் சேர்க்க கூடாத உணவுகளை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. ​​​​நீங்கள் உண்ணும் அன்றாட உணவுகள் உண்மையில் உங்கள் சருமத்தை சேதப்படுத்தக்கூடும் என்பதை நீங்கள் உணராமல் இருக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயது ஏற ஏற, உடல்நலம் மட்டுமின்றி, சருமத்தில் சுருக்கம், வறட்சி போன்ற பல சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. உங்கள் சருமத்தை இளமையாக பராமரிக்க விரும்பினால், உங்கள் உடலில் கொலாஜன் உற்பத்தியை பாதித்து சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொதுவான உணவுகளை தவிர்க்க (Health Tips) வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்


உப்பு


அதிகப்படியான உப்பை உட்கொள்வதால் உடலில் நீர் தேங்குகிறது, இதன் காரணமாக சருமம் வீங்கியதாகவும் வறண்டதாகவும் தோன்றும். கண்களைச் சுற்றியுள்ள மென்மையான பகுதி குறிப்பாக எளிதில் பாதிக்கப்படுகிறது. இதனால் கண்களுக்கு கீழே பைகள் தொங்கி தோற்றத்தை பாதிக்கும். கூடுதல் உப்பு கொண்ட பேக் செய்யப்பட்ட உணவுகளை குறைந்தபட்சமாக உட்கொள்வது சருமத்திற்கு ஒரு வரமாக இருக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், ஊறுகாய் போன்றவற்றில் அதிக அளவில் உப்பு இருக்கும். இதனை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது.


மைதா உணவுகள்


வெள்ளை பிரெட், போன்ற உயர் கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் உங்கள் சருமத்திற்கு விஷமாக இருக்கும். ஊட்ட சத்துக்கள் இல்லாத இதனை அதிக அளவில் சாப்பிட்டால் முதுமை விரைவில் ஏற்படும். ரொட்டியில் உள்ள சர்க்கரை, உடலில் உள்ள கொலாஜன் புரதங்களுடன் பிணைப்பதால், அவை பலவீனமடைவதே இதற்குக் காரணம். காயம் குணப்படுத்துவதற்கும் ஆரோக்கியமான சருமத்தை பராமரிப்பதற்கும் கொலாஜன் அவசியம். இந்நிலையில் கொலாஜன் குறையும் போது முகத்தில் நிறைய சுருக்கங்கள் வர ஆரம்பிக்கும்.


மேலும் படிக்க | தைராய்டு பிரச்சனை இருக்கா..... நீங்கள் செய்ய வேண்டியதும்... செய்யக்கூடாததும்...!


மது


அதிகமாக மது அருந்துவதால் சருமம் வறண்டு, ஊட்டம் இல்லாமல் காணப்படும். ஆல்கஹால் ஒரு டையூரிடிக் ஆக செயல்படுகிறது இதனால் உடல் அதிக அளவிலான தண்ணீரை இழக்கிறது. இதனால் உடலில் ஏற்படும் அதிக நீர் இழப்பின் மூலம், உப்பு மற்றும் சத்துக்களையும் இழக்கிறது. இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்து குறைபாடு கொலாஜன் உற்பத்தி போன்ற பிற செயல்பாடுகளைச் செய்யும் உடலின் திறனை பாதிக்கிறது.


பதப்படுத்தப்பட்ட இறைச்சி


பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளான சிக்கன், பேக்கேஜ் செய்யபப்ட்ட உணவுகள் துரித உணவுகள் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்வது உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இந்த தயாரிப்புகளில் பொதுவாக அதிக அளவு ஹார்மோன்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளன. இது உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். மேலும் இது பல சிறிய மற்றும் பெரிய அளவில் சருமம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.


பால் பொருட்கள்


பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் பதப்படுத்தப்பட்ட பாலாடைக்கட்டி உள்ளிட்ட பல பால் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் போன்றே ஹார்மோன் அளவை அதிகரிக்கலாம். இவை ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும், இதன் விளைவாக முகப்பருக்கள் அதிகரித்து சருமத்தில் எண்ணெய் பசை அதிகரிக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | மசாலாக்களில் ரசாயன கலப்பு... புற்றுநோய் அபாயம் குறித்து FSSAI எச்சரிக்கை..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ