மஞ்சள் பற்கள் அல்லது கறுப்புப் பற்கள் சில சமயங்களில் யாரிடமாவது பேசும் போதோ அல்லது மற்றொருவரின் முன் சிரிக்கும்போதும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. பற்களின் மஞ்சள் நிறமானது கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இனிப்புகளை உட்கொள்வது, பற்களை சரியாக கவனிக்காதது உள்ளிட்ட பல காரணங்களால் மஞ்சள் பற்கள் ஏற்படுகின்றன. தினமும் உண்ணும் பொருட்களின் துகள்கள் பற்களில் படிந்து கொண்டே இருக்கும், அதனால் பிளேக் உருவாகிறது, இதுவே பற்கள் மஞ்சள் நிறமாக இருப்பதற்கு மிகப்பெரிய காரணம் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புகையிலை நுகர்வு, காபி மற்றும் தேநீர் அதிகமாக உட்கொள்வது, புகைபிடித்தல், மோசமான வாய்வழி சுகாதாரம், பல் எனாமலை பாதிக்கும் நோய்கள், உள்நோய்க்கான மருந்து, வயது அதிகரிப்பு போன்ற பல காரணங்கள் உள்ளன, இவை பற்களை மஞ்சள் நிறமாக மாற்றும். மஞ்சள் பற்களை வெண்மையாக்க பல் மருத்துவரிடம் செல்லலாம் என்றாலும், உங்கள் மஞ்சள் பற்களை முத்து போல் ஜொலிக்க சில ஆயுர்வேத வைத்தியங்களையும் முயற்சி செய்யலாம். அவை என்ன என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.


துளசி இலைகள் மற்றும் உலர்ந்த ஆரஞ்சு தோல்கள்:


* 7 துளசி இலைகளை எடுத்து நசுக்கி நன்றாக பேஸ்ட் செய்யவும்.
* காய்ந்த ஆரஞ்சு பழத்தோலை சிறிது அளவு எடுத்து அரைத்து மெல்லிய பொடியாக தயாரிக்கவும்.
* மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு படிகளையும் பின்பற்றிய பிறகு. இரண்டு பொருட்களையும் கலந்து நன்றாக பேஸ்ட் செய்யவும்.
* இந்த பேஸ்ட்டை நேரடியாக உங்கள் பற்களில் தடவி 20 நிமிடம் விட்டு பின் சாதாரண நீரில் வாயை கழுவவும்.
* வெள்ளை பற்களுக்கான இந்த வீட்டு வைத்தியம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது, எனவே இந்த தீர்வை ஒரு நாள் அல்லது வாரத்தில் பல முறை செய்யலாம்.


மேலும் படிக்க | கல்லீரல் முதல் நுரையீரல் வரை... வியக்க வைக்கும் வெல்லத்தின் மருத்துவ குணங்கள்!


பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர்:
* 2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து தண்ணீரில் கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும்.
* இந்த பேஸ்ட்டை உங்கள் பற்களில் தடவி 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.
* இந்த பேஸ்டை உங்கள் பற்களில் தடவிய பிறகு, உங்கள் வாயை தண்ணீரில் கழுவவும் மற்றும் தண்ணீரை வாயில் சுழற்றவும்.
* தினமும் இரவில் தூங்கும் முன் வெள்ளை பற்களுக்கு இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும்.


உப்பு மற்றும் எலுமிச்சை சாறு:
* ஒரு ஸ்பூன் உப்பை எடுத்து, எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தி உப்பு சேர்த்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும்.
* இந்த பேஸ்ட்டைக் கொண்டு பல் துலக்குங்கள்.


நிலக்கரி:
* கரியின் சில துண்டுகள் அல்லது காப்ஸ்யூல்களை எடுத்து பொடியாக நசுக்கவும்.
* பின்னர் உங்கள் பிரஷை தண்ணீரில் நனைத்து அதன் மீது சிறிது கரி பொடியை போடவும்.
* இந்த வீட்டு வைத்தியத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை பின்பற்றவும். கரியுடன் துலக்குவது வெள்ளை பற்களுக்கு சிறந்த வீட்டு வைத்தியம் ஆகும்.


ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் சூடான தண்ணீர்:
* இரண்டு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்து ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலக்கவும்.
* இந்த நீரால் வாய் கொப்பளித்து வாயில் சுழற்றவும்.
* வெள்ளை பற்களுக்கு இந்த வீட்டு வைத்தியத்தை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யவும்.


(பொறுப்பு துறப்பு: வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியுடன் எழுதப்பட்ட கட்டுரை இது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | குறைவாக சாப்பிடணும்... வயிறு நிறைவாகவும் இருக்கணுமா... ‘இந்த’ டிப்ஸ் உதவும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ