எடையை குறைக்க டயட்டில் இருப்பது சிறந்த பலன் தரும். எனினும், சிலருக்கு டயட்டில் இருக்கும் போது, அதிக பசி எடுத்து, அதிக உணவு உண்பதால், எடையை குறைக்க நினைக்கும் முயற்சிகள் பாழாகி விடும்.
இதனை தவிர்க்க, குறைவாக சாப்பிட்டாலும் வயிறு நிறைந்த உணவுகள் மற்றும் பழக்கங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். சில உணவுகள் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். எடை இழக்க குறைவாக சாப்பிடுவது மிக முக்கியம்.
குறைவாக சாப்பிட்டாலும் நிறைவாக உணர நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சரியான உணவு வகைகளை சரியான நேரத்தில் சாப்பிடுவதுதான். சில உணவுகள் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். எடை இழக்க குறைவாக சாப்பிடுவது மிக முக்கியம்.
எடையைக் குறைக்க, கலோரிகளை உட்கொள்வதைக் குறைக்க அல்லது குப்பை உணவுகளைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு, இடைப்பட்ட உண்ணாவிரதம் என்னும் Intermittent Fasting மிகவும் உதவும். நீங்கள் இடைபட்ட விரதத்தின் போது, நீங்கள் 10 மணிநேரம் சாப்பிடுகிறீர்கள். ஆனால் 14 மணிநேரம் விரதம் இருக்கிறீர்கள். இந்த அணுகுமுறையை நீங்கள் முயற்சிக்கும்போது, உணவு எடுத்துக் கொள்வது தானகவே குறைந்து விடும்.
உணவில் சில வகையான உணவுகளை மட்டுமே சேர்க்கவும். நீங்கள் உணவு அல்லது சிற்றுண்டி சாப்பிடும் போது, பல வகையான உணவுகளை சேர்க்க வேண்டாம். இதன் மூலம் நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைக்க உதவும்.
பதப்படுத்தப்பட்ட உணவு, துரித உணவுகளை சாப்பிடுவதை உடனடியாக நிறுத்துங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக போதையை ஏற்படுத்தும். உதாரணமாக, நீங்கள் ஒரு நாள் ஒரு பர்கர் சாப்பிட்டால், அதனால் பாதிப்பு இருக்காது என்று நினைத்து, நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். மறுநாள் அதே பர்கரை சாப்பிட வேண்டும் போல் உணர்வீர்கள்.
உறக்கம் பசியைக் கட்டுப்படுத்த உதவும். போதுமான தூக்கம் நீண்ட நேரம் வயிறு நிறைந்ததாக உணர உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. ஏனெனில் நீங்கள் தூங்கும்போது, உங்கள் உடல் எந்த ஆற்றலையும் வெளிப்படுத்தாது. இதனால், நீங்கள் பசியை உணர மாட்டீர்கள்.
நம்மில் பலர் ஆப்பிளின் பசியை திருப்திப்படுத்தும் சக்தியை குறைத்து மதிப்பிடுகிறோம். நீங்கள் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய சிறந்த ஒரு பழம் இதுதான். இது உங்களை நீண்ட நேரம் வயிறு நிறைவாக வைத்திருக்கும். இது உங்கள் உடல் எடையை குறைக்கவும் உதவும்.
ஓட்ஸ், நார்ச்சத்து மிகவும் நிறைந்த மற்றொரு உணவு மற்றும் அதிக திருப்திப்படுத்தும் சக்தி கொண்டது. உங்கள் தற்போதைய உணவை ஓட்ஸுடன் மாற்றவும். ஒரு சிறிய அளவிலான ஓட்ஸ் உங்களை நீண்ட நேரம் வயிறு நிறைவாக வைத்திருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.