பொதுவாக பண்டிகைகள் முடிந்த பிறகு மறுநாள் காலையில் எந்திருக்கும்பொழுது சிலர் சோர்வாகவும், சோகமாகவும் உணர்வார்கள், இந்த உணர்வை அயல்நாடுகளில் ஹாலிடேஸ் ப்ளூஸ் என்று அழைக்கின்றனர்.   பண்டிகைக்கு மறுநாள் நாம் சோகமாக அல்லது சோர்வாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும்,  நம்முடைய உணர்வுக்கு இதுதான் காரணம் என்று சொல்லிவிட முடியாது.  நாம் சோர்வாகவும், சோகமாகவும் உணர்வதை காட்டிலும் உணர்ச்சி ரீதியாக சில மாற்றங்களையும் நமக்குள் நாம் காண முடியும்.  பலரும் பண்டிகையை கொண்டாடிய மனநிலையிலேயே இருக்கின்றனர், பழையபடி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி செல்ல பலரும் விரும்புவதில்லை, பண்டிகையை இன்னும் சில நாட்கள் கொண்டாடவே விரும்புகின்றனர்.  பண்டிகை முடிந்த பிறகு நாம் சோர்வடையாமல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப கீழே கூறப்பட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பான் மற்றும் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரசின் எச்சரிக்கை!


1) ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை சாப்பிடுங்கள், காஃபின் நிறைந்த பொருட்களை சாப்பிடுவது மற்றும் ஆல்கஹால் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.


2) உங்களுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் சப்ளிமென்டுகளை எடுத்துக்கொள்ள தவறாதீர்கள்.


3) நன்கு ஓய்வெடுங்கள், உங்களுக்கு நீங்களே அதிகமாக அழுத்தம் கொடுக்கவோ அல்லது கடுமையான வேலையை செய்யாதீர்கள்.


4) எதாவது மகிழ்ச்சியான மற்றும் வித்தியாசமான செயல்களை செய்ய முயற்சி செய்யுங்கள்.


5) உங்களுக்கு பிடித்தமான பாடல்கள் சிலவற்றை விரும்பி கேளுங்கள்.


6) மூச்சு பயிற்சி உங்களது சோர்வை நீக்க சிறந்ததொரு பயிற்சியாக இருக்கும் அதனால் மூச்சு பயிற்சி செய்யுங்கள்.


7) உங்களால் முடிந்தவரை யாருக்காவது எதாவது நல்லதை செய்யுங்கள் அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.


பண்டிகையாக இருந்தாலும் சரி ஒரு விஷயமாக இருந்தாலும் அது முடிந்துவிட்டால் முடிந்தது தான், நாம் பழையபடி இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டியது அவசியம் அதனால் அதனை அப்படியே கடந்துவிடுவது நல்லது.  பண்டிகையில் நீங்கள் மகிழ்ந்த விஷயங்களை நினைத்துக்கொண்டு இரவில் நிம்மதியாகவும், நன்றாகவும் உறங்கி மறுநாள் எழுவது உங்களை புத்துணர்வுடன் இருக்க செய்யும்.


மேலும் படிக்க | தீபாவளியால் அதிகரித்த காற்று மாசு! 16 சிகரெட் பிடித்த பாதிப்பை ஏற்படுத்திய பட்டாசு புகை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ