காஷ்மீர் மக்களை வரவேற்கும் விதத்தில் டெல்லி ஓட்டலில் வித்தியாசமாக ‘Article 370 தாளி’ அறிமுகம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யது, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மத்திய அரசு. அந்த மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பல கட்சியினரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில், காஷ்மீரில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லியில் உள்ள ஆர்டோர் 2.1 என்ற பிரபல ஓட்டல், ‘Article 370 தாளி’ என்ற பெயரில் காஷ்மீர் உணவு வகைகளை அறிமுகம் செய்துள்ளது.


இந்த ‘Article 370 தாளி’ ரூ.2,370 (சைவம்), ரூ.2,669 (அசைவம்) என்று 2 வகைகளில் வழங்கப்படுகிறது. காஷ்மீரைச் சேர்ந்தவராக இருந்தால், அரசு அடையாள அட்டை ஒன்றை காட்டினால் இந்த விலையில் ரூ.370 குறைக்கப்படும். சைவ தாளியில் காஷ்மீர் புலாவ்  உள்ளிட்ட பல உணவு வகைகள் வழங்கப்படும். அசைவமாக இருந்தால் சைவ உணவுகளுடன் காஷ்மீர் ஆட்டுக்கறியும் சேர்த்து வழங்கப்படும். இது குறித்து ஓட்டல் உரிமையாளர் சுவ்வெட் கல்ரா கூறியதாவது:


நாம் மதச்சார்பற்ற நாட்டில் வாழ்கிறோம். அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க வேண்டும். இந்த நாடு ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும், மிகப்பெரிய குடும்பமாக இருப்பதற்கும் எங்கள் ஓட்டலின் பங்களிப்புதான் ‘Article 370 தாளி’.



மத்திய அரசின் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். ஒவ்வொரு ‘Article 370 தாளி’க்கும் நாங்கள் வசூலிக்கும் கட்டணத்தில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் ரூ.170 காஷ்மீர் நிவாரண நிதிக்கு வழங்குவோம். மதச்சார்பற்ற தன்மையை ஊக்குவிக்கும் வகையில் இந்த உணவை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.