பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் :அழைப்பு விடுத்த திமுக
தந்தை பெரியார் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாப்படுகிறது.
வரும் 17 ஆம் நாள் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்கு 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாப்படுகிறது. அன்று திமுக சார்பில் சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு காலை 8 மணி அளவில் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
இந்தநாள் இதனால் திமுக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என்று திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என சென்னை மாவட்ட திமுக தெரிவித்துள்ளது.