பணப்பிரச்சனையை நீக்கி செல்வத்தை கொடுக்கும் அசோகமர வழிபாடு
அசோகமரத்தை வழிபட்டால் பணப் பிரச்சனை நீங்கி, அபரிமிதமான செல்வம் உங்களைத் தேடி வரும்.
அசோக மரம் மருத்துவ குணம் கொண்டதாக வேதங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த மரம் வீட்டைச் சுற்றி இருந்தால் துக்கம் நீங்கும் என்பதும் நம்பிக்கை. அசோக மரம் இருக்கும் இடத்தில், நேர்மறை ஆற்றல் மேலோங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அந்த சூழ்நிலை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். அசோக மரம் இருக்கும் இடத்தில் செல்வமும், பெருகுமாம்.
அமைதி
மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு வேண்டும் என்று விரும்புபவர்கள் வீட்டில் அசோக மரத்தை நட்டு, அதன் வேருக்கு தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வாருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் படிப்படியாக வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்க தொடங்கும். இதனுடன், குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக மாறும்.
மேலும் படிக்க | புகுந்த வீட்டில் மகிழ்ச்சியை கொண்டு சேர்க்கும் ‘4’ ராசிப்பெண்கள்..!!!
வெற்றி
நீங்கள் சில வேலைகளில் வெற்றி பெற முயற்சித்து அந்த வெற்றி கிட்டவில்லை என்றால், புஷ்ய நட்சத்திரத்தில் அசோக மரத்தின் 11 விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதன்பின்னர், இந்த விதைகளை ஒரு சிவப்பு துணியில் கட்டி, வழிபடும் இடத்தில் வைக்கவும். நீங்கள் வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம், கண்டிப்பாக அதைப் விதைகளை பார்த்துவிட்டு செல்ல வேண்டும். இதைச் செய்வதன் மூலம், உங்கள் வேலையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மேலோங்கும்.
வாஸ்து தோஷங்கள் நீங்க
வாஸ்து சாஸ்திரத்தின் படி, அசோக மரமும் வீட்டின் வாஸ்து தோஷங்களை நீக்க உதவுகிறது. அசோக மரம் நடப்பட்ட வீட்டின் முன், எந்த வித எதிர்மறை சக்தியும் இருக்காது. இது தவிர, மாலையில் இந்த மரத்தடியில் நெய் தீபம் ஏற்றி வைப்பதன் மூலம், வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவுகிறது.
திருமண தடைகள் நீங்கும்
திருமணம் தாமதமானாலோ அல்லது ஏதேனும் தடைகள் வந்தாலோ அதை நீக்க அசோக மரத்தின் இலைகளை வீட்டிற்கு எடுத்து வந்து தண்ணீரில் போட்டு குளிக்கவும். தொடர்ந்து 42 நாட்கள் செய்து வந்தால், உங்களுக்கான பலன் நிச்சயம் கைகூடும். இவையெல்லாம் பாரம்பரியமாக சொல்லப்படும் பொதுவான நம்பிக்கை.
மேலும் படிக்க | 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் சனி பெயர்ச்சி, மிகுந்த கவனம் தேவை
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR