திருமணமான ஒரு இளைஞன் தனது முன்னாள் காதலிக்கு (அவர்கள் பிரிந்த பின்னர் ஒரு வருடம் முழுவதும்) இடைவிடாது குறுஞ்செய்திகளை அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கைது செய்யப்பட்ட நபருக்கு தற்போது திருமணமாகி ஒரு மகன் இருக்கின்றார். என்றபோதிலும், அவர் தனது காதலியை ஆழமாக காதலித்ததால் இவ்வாறு குறுஞ்செய்திகளை அனுப்பியதாக வாதிட்டுள்ளார்.


தங்களது காதல் முறிவுக்கு முன்னர் சில காலங்கள் இருவரும் ஒன்றாக இருந்ததாகவும், பின்னர் பிறிந்து சென்றதாகவும் தெரிகிறது. எனினும் இந்த பிரிவினை கைதுசெய்யப்பட்ட ஆணால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இதன் காரணமாக தொடர்ந்து தனது காதலியை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார்.


தினம்தொறும் பல நூறு குறுஞ்செய்திகளை பாதிக்கப்பட்ட ஆண் அனுப்ப, குறித்த இளம்பெண் அவரது கைப்பேசி எண்ணை தடை பட்டியலில் இணைத்துள்ளார். இளம்பெண்ணின் இந்த செயல்பாடு அவரை மேலும் செய்திகள் அனுப்ப தூண்டியுள்ளது.


ஒருகட்டத்தில் தனது குறுஞ்செய்திகள் தனது காதலியை சென்றடையவில்லை என அறிந்த காதலர், புதிய எண்ணுடன் தொடர்ந்து முயற்சித்துள்ளார். இதற்காக அவர் பயன்படுத்தியது ஒரு கைபேசியை அல்ல, 5 கைப்பேசிகள். 5 வெவ்வேறு எண்களை கொண்டு தனது காதலியை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் என அனைத்து முறையிலும் அவரை தொடர்பு கெள்ள முயற்சிக்க, ஆத்திரம் கொண்ட அவரது காதலி, தன்னை தொடர்புகொள்ள முயற்சிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார்.


இதனையடுத்து Ras Al Khaima காவல்துறையில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்,. இந்த புகாரின் பேரில் குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​அவர் அந்தப் பெண்ணுக்கு இடைவிடாது செய்திகளை அனுப்பியதாக ஒப்புக்கொண்டார்.


பின்னர் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது., அவர் தனது முன்னாள் காதலியை தான் இன்றும் காதலிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அருகில் இருந்தும் அவரை தனிமைபடுத்த விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பினை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.