Work from home: மக்கள் என்ன நினைக்கிறார்கள்... உண்மை நிலை என்ன..!!!
வீட்டில் இருந்து வேலை செய்வது பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என அசோசியேட்டட் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி ஆப் இந்தியா (Assocham) மற்றும் பிரைமஸ் பார்ட்னர்ஸ் (Primus Partners) ஆய்வு நடத்தியது.
நான்காம் கட்ட அன்லாக் தொடங்கிய பிறகு நாட்டின் பெரும்பாலான வணிகங்கள் இயங்க தொடங்கியுள்ளன.
சில மாநிலங்களில் செப்டம்பர் 21 முதல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் கூட திறக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரம் மீண்டும் பழையபடி இயங்க தொடங்கியுள்ளது. ஆனால் கொரோனா பரவல் குறையவில்லை. நாட்டில் கொரோனா (Corona) நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டியுள்ளது.
பஸ், மெட்ரோ, ரயில் சேவை தொடங்கி விட்ட நிலையில், இது போன்ற பொது போக்குவரத்தினால், தொற்று ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளன என்பதை மறுக்க முடியாது. அதனால், கோவிட் -19 இன் பரவல் ஆபத்தை கருத்தில் கொண்டு, பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர் என கூறப்படுகிறது.
அசோசியேட்டட் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி ஆப் இந்தியா (Assocham) மற்றும் ஆலோசனை நிறுவனமான பிரைமஸ் பார்ட்னர்ஸ் (Primus Partners) நடத்திய ஆய்வில், 74 சதவீத மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை தொடர் விரும்புகின்றனர்.
நாட்டின் எட்டு பெருநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் புனே ஆகிய இடங்களில் அசோசியேட்டட் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி ஆப் இந்தியா (Assocham) மற்றும் ஆலோசனை நிறுவனமான பிரைமஸ் பார்ட்னர்ஸ் (Primus Partners) ஆய்வு நடத்தியது. அதில், மூன்றில் நான்கில் ஒரு பங்கு மக்கள், வீட்டிலிருந்து வேலை செய்ய (Work From Home) விரும்புகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
லாக்டவுன் காலத்தில், 79 சதவீத ஊழியர்கள் வொர்க் ஃப்ரம் ஹோம், அதாவது வீட்டிலிருந்தே அலுவலக பணிகளை முடித்தனர். இப்போது அன்லாக் நடவடிக்கை தொடங்கிய பிறகும், கொரோன அபரவலை கருத்தில் கொண்டு 74 சதவீத மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யவே விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | Bollywood தலைநகரமாகும் உத்திரபிரதேசம்... யோகியின் அதிரடி திட்டம்..!!!
அலுவலகத்திற்கு சென்றால், கொரோனா வைரஸின் பிடியில் சிக்கிக் கொள்ளலாம் என்று பணியாளர்களின், குடும்பத்தினரும் அஞ்சுகிறார்கள்.
56 சதவீத மக்கள், வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை ஓரளவு செயல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். இருப்பினும், அலுவலகம் திறக்கப்பட வேண்டும் என்று 26 சதவீத மக்கள் விரும்புகின்றனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR