இந்த உலகத்தில் கடன் வாங்காத மனிதர்களை பார்ப்பது கடினம். ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசம் எதுவும் இன்றி, எல்லோரும் அவர்களது தகுதிக்கு ஏற்ப கடன் வாங்குகின்றனர். எனினும் ஒரு கட்டத்திற்கு மேல் நாம் திட்டமிட்டபடி திருப்பி செலுத்த முடியாமல் கடன் நமது தூக்கத்தையும், அமைதியான வாழ்க்கையையும் கெடுத்து விடுகிறது. தீராத கடன் பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய ஞாயிற்றுக்கிழமை பரிகாரங்கள் உதவும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெறவும், வீட்டில் செல்வம் மற்றும் உணவு தானியங்கள் நிறைந்து இருக்கவும், சுப பலன்களைப் பெறவும், திருமண வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை சமாளிக்கவும், ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கொள்ளும் சில பரிகாரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


மேலும் படிக்க | மே 2022 மாத ராசி பலன்: மேஷம் முதல் கடகம் வரை


கடன் பிரச்சனை முதல் வாழ்வின் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபட செய்ய வேண்டியவை:


வாழ்வில் கடன் தொல்லை நீங்கு மகிழ்ச்சியும், செழுமையும் பெற, ஞாயிற்றுக்கிழமை நெல்லிகாய் மரத்திற்கு தண்ணீர் விடவும். இதற்குப் பிறகு, நெல்லிக்காய் மரத்தை கைகூப்பி வணங்கவும். இது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது.


வீட்டில் செல்வமும் உணவும் என்றென்றும் நிறைந்து இருக்க ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் அன்னை லட்சுமியை வழிபடுங்கள். மாலை வேளையில் அன்னை லட்சுமி தேவியின் முன் நெய் தீபம் ஏற்றி அன்னையிடம் பிரார்த்தனை செய்து வந்தால் வீட்டில் செல்வமும், தானியமும் பெருகும்.


குடும்பத்தில் மகிழ்ச்சி என்றென்றும் நீடிக்க, ஞாயிற்றுக்கிழமை, தேங்காய் பர்ஃபி செய்ய நைவேத்தியம் செய்யவும். வாசனைக்காக அதில் சிறிது குங்குமப்பூவையும் சேர்க்கலாம். பர்ஃபியை குடும்ப உறுப்பினர்களிடையே பிரசாதமாக விநியோகிக்கவும். இதனால், லட்சுமி தேவி மனம் குளிரும். 


மேலும் படிக்க | மே 2022 மாத ராசி பலன்: சிம்மம் முதல் விருச்சிகம் வரை


வியாபாரத்தைப் பெருக்க, ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு விவசாயி அல்லது குயவனுக்கு வெள்ளை நிறச் சட்டையை தானமாக கொடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் வாழ்க்கையில் தொழில் வளர்ச்சி ஏற்படும்.


உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மஞ்சள் மற்றும் இரண்டு ஏலக்காய்களை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமை முழுவதும் அவற்றை உங்களுடன் வைத்திருந்து மறுநாள் கோயிலில் காணிக்கையாக செலுத்துங்கள்.


கண் திருஷ்டி படாமல் இருக்க ஞாயிற்றுக்கிழமை அன்று மண் விளக்கை எடுத்து கற்பூரம் மற்றும் 6 கிராம்பு சேர்த்து எரியுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் கந்திருஷ்டியில் இருந்தும் தப்பிக்கலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Solar Eclipse: கிரகணத்தின் போது சூரியனின் அருளைப் பெற செய்ய வேண்டியவை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR