வணிகம் அல்லது சுய தொழிலில்  இருப்பவர்கள் சிலருக்கு கடின உழைப்பு, ஈடுபாடு  உள்ள போதிலும் வருமானம் அதிகம் கிடைக்காமல் வருந்தும் நிலை இருக்கும்.  தங்கள் இலக்குகளை அடைய அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கும் போதிலும், இந்த போட்டி மிகுந்த உலகில்,  நீங்கள் மேற்கொள்ளும் வியாபரத்தில், வணிகத்தில் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படலாம். ஆனால், அனைத்து தடைகள் மற்றும் ரிஸ்குகளை தாண்டி வியாபாரம் கொழிக்க, ஜோதிடப் பரிகாரங்கள் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட பரிகாரம், என்பது வெற்றிப் பாதையை எளிதாக்குகிறது. சுய தொழிலில் வெற்றியை அடைய உதவும் எளிய 5 பரிகாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


1. உங்கள் வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்காமல் பிரச்சனையை சந்தித்தால், சனிக்கிழமையன்று தானம் கொடுக்கவும். இது சனி பகவானை மகிழ்விக்கும். உங்கள் நற்செயல்களுக்கான பலன்களை வட்டியுடன் திருப்பித் தருபவர் சனி பகவான்.


2. வியாபாரம் செழிக்க, கைப்பிடி  மிளகு மற்றும் உளுந்து எடுத்து உங்கள் வணிக வளாகத்தின் தரையில் தூவலாம். ஒரு ஞாயிற்றுக்கிழமை இதைச் செய்தால் மிகவும் நல்லது.  பின்னர் நீங்களே இவற்றை திரட்டி சேகரித்து தனிமையான இடத்தில் புதைக்கவும்.


ALSO READ | பித்ரு தோஷம் என்றால் என்ன? அதற்கான நிவர்த்தி, பரிகாரம் என்ன?


3. காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சூரிய பகவானை நோக்கி ஜபிக்கவும். அவரை மகிழ்விக்க சுத்தமான தண்ணீரையும் வெல்லத்தையும் சமர்பிக்கவும். இதன் மூலம் வியாபாரம் சிறக்கும், செழிக்கும்.


4. உங்கள் வியாபாரம் செழிக்க சிறிய பொம்மைகளை வாங்கி, இந்த பொம்மைகளை தேவைப்படும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அவர்களின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சி உங்கள் வியாபாரத்தில் செழிப்பைக் கொண்டுவரும்.


5. அரச மர இலையை எடுத்து நீங்கள் அமரும் இருக்கையில் வைக்கவும். இதை சனிக்கிழமைகளில் மட்டுமே செய்ய வேண்டும். ஏழு சனிக்கிழமைகள் இதை தொடர்ந்து பின்ப்பற்றவும், பின்னர் காய்ந்த இலைகளை சேகரித்து அதை ஒரு நதியிலோ அல்லது சுத்தமான பாயும் நீரிலோ விடவேண்டும்.


ALSO READ | குலதெய்வ பூஜை வழிபாட்டின் முக்கியத்துவம்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR