பிலவ, ஆனி 11ம் நாள் (2021 June, 25): இன்றைய உங்கள் ராசி பலன் கூறுவது என்ன!
எப்படி இருக்கும் உங்கள் ராசிபலன்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? எந்த காரியம் எப்பொழுது செய்வது என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
எப்படி இருக்கும் உங்கள் ராசிபலன்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? எந்த காரியம் எப்பொழுது செய்வது என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
ராசிபலன் - 22-06-2021
மேஷம் : நிதானமான செயல்பாடுகளின் மூலம் எண்ணிய இலக்கை அடைய முடியும். தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். ஒப்பந்தம் சார்ந்த பணிகளில் பொறுமையுடன் முடிவெடுக்கவும்.
ரிஷபம் : குடும்ப உறுப்பினர்களிடம் கவனத்துடன் இருக்க வேண்டும். புதிய நபர்களிடம் தனிப்பட்ட விவரங்களை பகிர்வதை குறைத்துக்கொள்வது நல்லது. பயணங்களின் தன்மைகளை அறிந்து முடிவுகளை எடுப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் போது சிந்தித்து செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.
மிதுனம் : உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. இணைய வர்த்தக பணிகளில் முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது.
கடகம்: எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புத்திரர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும்.
சிம்மம் : பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். கடன் தொடர்பான மனவருத்தங்கள் குறையும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பயணங்களின் மூலம் மனதில் மாற்றமும், புத்துணர்ச்சியும் ஏற்படும்.
கன்னி: செய்கின்ற புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். கால்நடைகளின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். மனை அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். கல்வியில் மாற்றமான சூழல் உண்டாகும்.
துலாம் : உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். வாரிசுகளுக்கு சுபகாரியங்கள் செய்வதற்கான முயற்சிகள் ஈடேறும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபார ரீதியான கொடுக்கல், வாங்கல் தொடர்பான முயற்சிகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
விருச்சிகம் : குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். கருத்துக்களை வெளியிடும்போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில விஷயங்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும்.
தனுசு : மனதில் இருந்துவந்த நீண்ட நாள் குழப்பங்களுக்கு தெளிவும், புரிதலும் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். அவ்வப்போது பழைய நினைவுகள் மனதில் ஏற்பட்டு மறையும். நிதானமான செயல்பாடுகளின் மூலம் பகையை தவிர்க்க முடியும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.
மகரம் : எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். புதுவிதமான அனுபவங்களின் மூலம் பொறுப்புகளும், விவேகமும் மேம்படும்.
கும்பம் : குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் ஈடேறும்.
மீனம் : தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் ஆதரவும், உதவிகளும் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.