சுக்கிரன் சஞ்சாரம்: தேவகுரு  பிருகஸ்பதியின் ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சுக்கிரனின் சஞ்சாரம் டிசம்பர் 30 ஆம் தேதி தனுசு ராசியில் நடக்க உள்ளது. இந்த ராசியில் 2022 ஜனவரி 27 வரை சுக்கிரன் இருக்கப் போகிறார். ஜோதிடத்தில், சுக்கிரன் கிரகம் செல்வம், மகிழ்ச்சி, செழுமை, காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு முக்கிய காரணியாக கருதப்படுகிறது.  டிசம்பர் 30ம் தேதி நடைபெறும் சுக்கிரனின் ராசி மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமானதாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்


இந்த சுக்கிரனின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக அமையும். 2022 ஜனவரி மாதம் இந்தப் பெயர்ச்சியின் பலன் காரணமாக மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள் இந்த ராசிக்காரர்கள். இந்தப் பெயர்ச்சி காலத்தில் பணமும் லாபமும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். இது தவிர சமூக மரியாதையும் அதிகரிக்கும். இதனுடன், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.


சிம்மம்


இந்த ராசிக்காரர்களுக்கு புத்தாண்டின் (Leo Horoscope 2022) முதல் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். பயணத்தின் போது அதிர்ஷ்டம் உங்களுக்கு வெற்றியை தரும். இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். இது தவிர, நீங்கள் பணத்தையும் சேகரிக்கலாம். சுக்கிரனுடன் அன்னை லக்ஷ்மியும் மகிழ்ச்சி அடைவாள். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். மேலும் பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.


ALSO READ | Weekly Horoscope: ஆண்டின் கடைசி வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு அட்டகாசமாய் உள்ளது 


கன்னி ராசி


கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். பணம் சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கும். கடின உழைப்பால் அனைத்தையும் சாதிப்பீர்கள். இது தவிர வேலையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பண பிரச்சனை நீங்கும். மாணவர் வகுப்பினரும் பயன் பெறுவர். கன்னி ராசியின் அதிபதி புதன். புதனும் சுக்கிரனும் நண்பர்கள். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரத்தில் சுப பலன்கள் கிடைக்கும்.


தனுசு 


தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதம். பயணத்தின் போது பண ஆதாயம் உண்டாகும். இது தவிர உத்தியோகத்தில் சுப பலன்களும் கிடைக்கும். வியாபாரத்தில் சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். தந்தை அல்லது மூத்த சகோதரரிடமிருந்து நிதி உதவியும் கிடைக்கும். தொழிலில் பொருளாதார ரீதியாக புதிய வாய்ப்புகள் அமையும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | அடுத்த 2 நாட்களுக்குள் அதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசிக்காரர்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR