வெளிநாட்டில் குடியேற வேண்டும் அல்லது குறைந்த பட்சம் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல வேண்டும் என ஆசைப்படுவர்கள் யார் தான் இல்லை. இருப்பினும்,  சிலருக்கு மட்டுமே அதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. சிலர் நிரந்திரமாக வெளிநாட்டிற்கு குடியேறி வாழ்கின்றனர். சிலர் வேலை நிமித்தமாக சென்று சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர். சிலர் திருமணம் செய்த பிறகு, கல்வி கற்க, சிலர் குழந்தைகள் இருப்பதால் என பல காரணங்களுக்காக செல்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட சாஸ்திரத்தின் மூலம், வெளிநாட்டுப் பயணம் யோகம் குறிப்பிட்ட ஜாதகத்திற்கு உள்ளதா என்பதை கண்டறியலாம்.  வெளிநாடு செல்லும் யோகத்தினை தீா்மானிக்கும் கிரகங்கள் சந்திரன், குரு, ராகு, செவ்வாய் ஆகிய கிரகங்கள் 9, 12 வீடுகளுடன், சோ்ந்திருந்தாலும் தொடா்பு இருந்தாலும் வெளிநாடு யோகம் வரும். சந்திரன், சுக்கிரன் நீர் கோள்கள். கடல்கடந்த வெளிநாட்டு பயணத்திற்கு இந்த இரு கிரகங்களும் காரணமாகின்றனர்.


ஜோதிடத்தின் படி, ஜாதகத்தின் 12 ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால், அந்த நபருக்கு வெளிநாட்டு பயண யோகம் சாத்தியமாகிறது. இத்துடன் இப்படிப்பட்டவர்கள் வெளிநாடுகளிலும் வாழ்வாதாரம் தேடுகிறார்கள். இது தவிர ஜாதகத்தின் ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தாலும் வெளியூர் பயண வாய்ப்புகள் உண்டு. மாறாக ஜாதகத்தில் 10ம் வீட்டில் சந்திரன் இருந்தாலோ அல்லது இந்த வீட்டில் சந்திரனின் பார்வை இருந்தாலோ வெளிநாட்டுப் பயண யோகம் உண்டாகும். 


மேலும் படிக்க | தீராத பிரச்சனையையும் தீர்த்து வைக்கும் சில எளிய பரிகாரங்கள்..!!


ஜாதகத்தின் ஏழாவது வீட்டில் அல்லது லக்னத்தில் சந்திரன் இருந்தால், அந்த நபர் வெளிநாட்டில் வியாபாரம் செய்கிறார். சனி தேவன் வாழ்வாதாரத்தின் காரணியாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனி, சந்திரனின் சேர்க்கை காரணமாகவும் வெளிநாட்டுப் பயணத்தையும் ஏற்படுத்துகிறது. 


அதிர்ஷ்ட ஸ்தானத்தில் ராகு அமர்ந்திருந்தால் வெளிநாட்டுப் பயண வாய்ப்பு உருவாகும். மறுபுறம், 7 ஆம் வீட்டின் அதிபதி 12 ஆம் வீட்டில் இருந்தால் அல்லது 12 ஆம் வீட்டின் அதிபதி 7 ஆம் வீட்டில் அமர்ந்திருந்தால், வெளிநாட்டுப் பயணத்திற்கான வாய்ப்பு வலுவாகிறது. அந்த குறிப்பிட்ட  நபர் வெளிநாட்டில் வியாபாரம் செய்யும் வாய்ப்பு உள்ளது.


வெளியூர் பயணம் செய்யும் ஆசை இருந்தால், அப்படிப்பட்ட சூழ்நிலையில், தினமும் காலையில் எழுந்ததும், செம்புப் பாத்திரத்தில் மிளகாயைக் கலந்து, சூரிய ஒளியை எரிக்கவும். அந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்வதால் சூரியபகவான் மகிழ்ந்து அயல்நாடு பயணம் செய்யும் யோகம் உண்டாகும். அதுமட்டுமின்றி, விமானத்தில் பயணம் செய்யும் போது அனுமனை வழிபடுவதும் வெளிநாட்டு பயண யோகத்தை உண்டாக்கும். மேலும், ஹனுமனை இந்த வடிவத்தை வழிபடுவதால், வாழ்வின் அனைத்து பிரச்சனைகளும் தீரும் எனவும் நம்பப்படுகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | செவ்வாய் - சனி சேர்க்கையால் ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும்..!!


மேலும் படிக்க | இந்த வாரம் உருவாகின்றன 3 ராஜ யோகங்கள்: யாரெல்லாம் பயன் பெறுவார்கள்? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR