ATM பரிவர்த்தனை தோல்வியா? பணம் வரவில்லையா? வங்கி ஒரு நாளைக்கு ரூ. 100 கொடுக்கும்
இனி, நீங்கள் கவலைப்பட வேண்டாம். இன்று இந்திய ரிசர்வ் வங்கியின் சிறப்பு விதி பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். அதாவது உங்கள் பணம் உடனடியாக திருப்பித் தரப்படும்.
ATM transaction New: பல முறை வாடிக்கையாளர் வங்கி ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்கச் செல்கிறார். சில நேரங்களில் ATM இயந்திரங்களில் இருந்து பணம் வெளியே வருவதில்லை. ஆனால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், வாடிக்கையாளர் உடனடியாக வங்கியைத் தொடர்பு கொள்கிறார். பல முறை சொல்லியும், அதன் பிறகும் பணம் கிடைப்பது இல்லை. உங்களுக்கும் இதுபோன்ற ஏதாவது நடந்திருந்தால், இனி, நீங்கள் கவலைப்பட வேண்டாம். இன்று இந்திய ரிசர்வ் வங்கியின் சிறப்பு விதி பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். அதாவது உங்கள் பணம் உடனடியாக திருப்பித் தரப்படும்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்படும் பணத்தை வங்கி உடனடியாக திருப்பித் தர வேண்டும். புகார் அளித்த ஏழு நாட்களுக்குள் வாடிக்கையாளர் கணக்கில் பணம் வரவில்லை என்றால், ATM அட்டை வழங்கிய வங்கி தினசரி ரூ .100 இழப்பீடு செலுத்த வேண்டும். இந்த விதியை ரிசர்வ் வங்கி 2019 செப்டம்பரில் செயல்படுத்தியது.
ALSO READ | ATM-ல் பணம் எடுக்கப் போகிறீர்களா? சிறு அலட்சியமும் ஆபத்தாகலாம், கவனம் தேவை!!
நீங்கள் வங்கியிடமிருந்து இந்த அபராதத்தொகையை பெற வேண்டும் என்றால், பரிவர்த்தனை தோல்வியடைந்த 30 நாட்களுக்குள் நீங்கள் புகார் அளிக்க வேண்டும். ஏடிஎம் பரிவர்த்தனை சீட்டு அல்லது வங்கி கணக்கு அறிக்கையுடன் உங்கள் புகாரை பதிவு செய்ய வேண்டும்.
இது தவிர, உங்கள் ஏடிஎம் அட்டையின் விவரங்களை வங்கியின் ஊழியரிடம் சொல்ல வேண்டும். உங்கள் பணம் 7 நாட்களுக்குள் திருப்பித் தரப்படாவிட்டால், நீங்கள் இணைப்பு -5 படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்த நாளில் இருந்து, உங்கள் கிடைக்கக்கூடிய அபராதத்தொகை தொடங்கும்.
விதிப்படி, புகார் அளித்த 7 நாட்களுக்குள் வங்கி பணம் செலுத்தவில்லை என்றால், அதாவது உங்கள் பணத்தை சரியான நேரத்தில் வங்கி திருப்பித் தரவில்லை என்றால், ஒவ்வொரு நாளும் வங்கியில் இருந்து அபராதத்தை வசூலிக்க உங்களுக்கு உரிமை உண்டு.
ALSO READ | இனி உங்கள் மொபைல் எண்ணை ரீசார்ஜ் செய்ய அருகிலிருக்கும் ATM செல்லுங்கள்..!
பரிவர்த்தனை நடந்த 30 நாட்களுக்குள் புகார் அளிக்கப்பட்டால் மட்டுமே வங்கியில் இருந்து பணம் அல்லது அபராதம் வசூலிக்கும் உரிமை உங்களுக்கு கிடைக்கும். பரிவர்த்தனை தோல்வியுற்று 30 நாட்களில் நீங்கள் புகார் அளிக்கவில்லை என்றால், அபராதத்தை வசூலிக்க உங்களுக்கு உரிமை இருக்காது.