ATM-ல் பணம் எடுக்கப் போகிறீர்களா? சிறு அலட்சியமும் ஆபத்தாகலாம், கவனம் தேவை!!

ATM-களின் சரியான பயன்பாடு மற்றும் அது தொடர்பான அத்தியாவசிய விஷயங்களை நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.

Last Updated : Aug 11, 2020, 06:37 PM IST
  • நீங்கள் PIN எண்ணை உள்ளிடும்போது அருகில் யாரும் இல்லை என்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.
  • பணம் வரவில்லை என்றால், உடனடியாக வங்கிக்குத் தெரிவிக்கவும்.
  • ATM-ல் பணம் எடுக்கும்போது வேறு நபரின் உதவியை நாட வேண்டாம்.
ATM-ல் பணம் எடுக்கப் போகிறீர்களா? சிறு அலட்சியமும் ஆபத்தாகலாம், கவனம் தேவை!! title=

பல முறை ATM-ல் நடக்கும் சில விஷயங்களின் விளைவுகளை நீங்கள் உடனடியாக உணர்வதற்கு முன்னர் உங்கள் கணக்கிலிருந்து சிலர் பணத்தை எடுத்து விடலாம்.  அத்தகைய நிலைமை வராமலிருக்க, விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியமாகும். ATM-களின் சரியான பயன்பாடு மற்றும் அது தொடர்பான அத்தியாவசிய விஷயங்களை நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் ATM-ஐ எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து வங்கிகள் அவ்வப்போது ஆலோசனைகளை வழங்குகின்றன.

ALSO READ: எங்கும் ஆதார், எதிலும் ஆதார்: விரிவடையும் ஆதார் அட்டையின் பயன்பாடுகள்!!

  • ATM-ல் இருந்து அல்லது வேறு எந்த வகையான பரிவர்த்தனையின் மூலம் பணத்தை எடுக்கும்போதும், ​​முதலில், வரவேற்பு செய்தி (Welcome Message) திரையில் காண்பிக்கப்படுவதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். ATM-ன் PIN ரகசியமானது. எனவே நீங்கள் PIN எண்ணை உள்ளிடும்போது அருகில் யாரும் இல்லை என்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.
  • ATM-ல் பரிவர்த்தனை முடிந்ததும், மீண்டும் வரவேற்புத் திரை வரும் வரை காத்திருங்கள். நீங்கள் பணத்தை எடுத்திருந்தால், வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS வந்துள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். உங்கள் கணக்கில் இருந்து நீங்கள் பணம் எடுக்காமல், உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதற்கான SMS வந்தால், உடனடியாக உங்கள் வங்கிக்கு இதைப் பற்றி தெரிவிக்கவும்.
  • ATM –ஐச் சுற்றி சந்தேகப்படும் விதத்தில் யாராவது இருந்தால், அவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். யாராவது உரையாடலில் ஈடுபட முற்பட்டால், கவனமாக இருங்கள். நீங்கள் வெளியேறிய பிறகு அந்த நபர் உங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முயற்சிக்கலாம். ஆகையால் கவனம் தேவை.
  • ATM-ல் கார்டைச் செருகுவதற்கான இடம் (Slot) சற்று வித்தியாசமாகத் தெரிந்தால், கவனமாக இருங்கள். உங்கள் கார்டின் விவரங்களைப் படிப்பதற்கான ஒரு சாதனம் அங்கு நிறுவப்பட்டிருக்கலாம். PIN மற்றும் அனைத்து தகவல்களையும் வழங்கிய பிறகும், பணம் வரவில்லை என்றாலோ அல்லது திரையில் 'பணம் இல்லை' என்ற செய்தி வரவில்லை என்றாலோ, உடனடியாக வங்கிக்குத் தெரிவிக்கவும்.

ATM-ல் பணம் எடுக்கும்போது வேறு நபரின் உதவியை நாட வேண்டாம். உங்கள் PIN எண்ணை ATM அல்லது டெபிட் கார்டில் எழுதுவது ஆபத்தானது. ATM மற்றும் டெபிட் கார்டின் PIN உங்களுக்கு மட்டும் தெரிந்திருக்க வேண்டிய ஒரு விஷயமாகும். ஆகையால் PIN பற்றி வங்கி ஊழியர்களிடமோ அல்லது உங்கள் வீட்டில் உள்ளவர்களிடமோ சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. 

ALSO READ: BSNL-லின் தரவு வேகம் அதிகரிப்பு... எந்தெந்த பகுதியில் என தெரிந்து கொள்ளுங்கள்!!

Trending News