Life Insurance Term Plan: கோவிட் -19 தொற்றுநோய் உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் இந்த காலத்தில், காப்பீட்டின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. டர்ம் பிளான் திட்டங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால் புதிய நிதியாண்டில் பல ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது டர்ம் பிளான் திட்டங்களின் பிரீமியத்தை 10% வரை அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறுகாப்பீட்டு பிரீமியத்தின் (Reinsurance Premium) அதிகரிப்பு காரணமாக, நிறுவனங்கள் டர்ம் பிளான் பிரீமியத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம். கோவிட் காரணமாக, உலகளாவிய இறப்பு விகிதத்தில் மாற்றங்கள் ஏற்பட்டதால், மறு காப்பீட்டு பிரீமியங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


நிறுவனங்களின்படி, மருத்துவம் அல்லாத மறுகாப்பீட்டு பிரீமியம் 25% வரை அதிகரித்துள்ளது.


மறுகாப்பீட்டு பிரீமியத்தின் அழுத்தத்தின் விளைவு


வல்லுநர்களின் கூற்றுப்படி, மறுகாப்பீட்டு பிரீமியத்தின் (Premium) மீதான அழுத்தம் காரணமாக, நிறுவனங்கள் டர்ம் பிளான் பிரீமியத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஆனால் கடந்த ஆண்டில் அதிகரித்த அல்லது அதிக அளவில் வர்த்தகம் செய்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் பாஸ் ஆன் செய்ய முடியாது.


விகிதங்கள் ஏப்ரல் 1 முதல் அதிகரிக்கக்கூடும்


ஆயுள் காப்பீட்டு (Life Insurance) டர்ம் பிளான் திட்டத்தின் விகிதங்கள் ஏப்ரல் 1 முதல் அதிகரிக்கக்கூடும். எமக்கு கிடைத்த செய்தியின் படி, காப்பீட்டு நிறுவனங்கள், கொரோனா காலத்தில், கொரோனா தொடர்பான வழக்குகளில் மட்டுமே 1250 கோடி ரூபாய் அளவிலான கிளெயிம்களை செட்டில் செய்துள்ளன.


டர்ம் பிளான் குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பை வழங்குகிறது


கால காப்பீடு என்பது ஆயுள் காப்பீட்டின் ஒரு பகுதியாகும். இது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு எதிராக ஒரு சிறந்த நிதி பாதுகாப்பை வழங்குகிறது. நீங்கள் எடுக்கும் கால காப்பீட்டுத் திட்டத்தைப் பொறுத்து, பாலிசி (Policy) காலங்களுக்கு இடையில் பாலிசிதாரரின் அகால மரணம் ஏற்பட்டால், அவரது குடும்பத்திற்கு உறுதியான தொகை வழங்கப்படுகிறது.


ALSO READ: Health Insurance-ன் வகைகளை இனி Color Coding மூலம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்


காப்பீட்டு நிறுவனங்கள் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளைத் தொடங்கும்


இந்த திட்டத்தில், காப்பீட்டு நிறுவனங்களின் சேவைகளை மேம்படுத்த மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளைத் தொடங்கவும் அவர் அறிவுறுத்தினார். பாலிசியுடன் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளைப் பெறுவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வசதிகள் கிடைக்கும். பாலிசியுடன் காப்பீட்டாளரின் அல்லது வாடிக்கையாளரின் அனுபவத்தை இது மேம்படுத்தும் என்று IRDAI கூறியது.பாலிசிதாரர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக காப்பீட்டு நிறுவனங்கள் விரைவில் காப்பீட்டு தயாரிப்புகளுடன் மதிப்பு கூட்டப்பட்ட சேவையையும் சேர்க்கும் என்று குந்தியா கூறினார்.


மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் இப்படி இருக்கும்காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் காப்பீட்டுக் கொள்கைகளில் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்கும். அதாவது நீரிழிவு நோயாளி எந்த உணவுத் திட்டத்தை பின்பற்ற வேண்டும், எதை உண்ண வேண்டும், எதை உண்ணக்கூடாது போன்ற அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளையும் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும். அவர்களுக்கு உடற்பயிற்சி பயிற்சியாளர்கள் வழங்கப்படுவார்கள். நோயாளிகள் சுகாதார பரிசோதனைகளைப் பெறுவதோடு ஆலோசனை வசதிகளும் கிடைக்கும். இவை அனைத்தும் கூடுதல் சேவையில் சேர்க்கப்படும்.


ALSO READ: விரைவில் கிடைக்கவுள்ளது 5 lakh ரூபாய்க்கான இலவச mediclaim: குறிப்புக் காட்டியது IRDAI


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR