புதுடெல்லி: கொரோனா நோயாளிகள் இனிமேல் காப்பீட்டிற்கு அதிக premium செலுத்த வேண்டியிருக்கும், காப்பீட்டு நிறுவனங்கள் விதிகளை மாற்றுகின்றன. கோவிட் பாதிப்பு ஏற்பட்ட பிறகு காப்பீட்டு திட்டத்தை வாங்குவதற்கு அதிக பிரீமியம் செலுத்த வேண்டுமா என்பது குறித்து மக்கள் மத்தியில் நிறைய குழப்பங்கள் உள்ளன.
கோவிட் -19 வைரஸ் தொற்றுநோயிலிருந்து மீள்வதற்கான சிகிச்சையானது அனைவருக்கும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். கோவிட் தொற்றுநோய் நமது பட்ஜெட்டை மாற்றிவிடும். கொரோனா சிகிச்சைக்காக செலவிடும் பணம், நமது சேமிப்பில் பெரும் பகுதியை குறைத்துவிடும்.
காப்பீட்டு பாதுகாப்பு மட்டுமே கொரோனா (Coronavirus) போன்ற கடுமையான சூழ்நிலையிலிருந்து நம்மை காப்பாற்ற முடியும். எது எப்படியிருந்தாலும், கோவிட் (Covid-19) தொற்றுநோய், காப்பீட்டின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் சுலபமாக புரிய வைத்துவிட்டது.
Also Read | Bird Flu சமயத்தில் முட்டை, சிக்கன் சாப்பிடலாமா? WHO என்ன சொல்கிறது?
ஆனால் கொரோனாவிலிருந்து மீண்ட மக்களுக்கு, எந்தவொரு புதிய காப்பீட்டையும் (Health Insurance) எடுத்துக்கொள்வது, மற்றவர்களுக்கு இருப்பதைப் போலவே எளிமையாகவும் சிக்கனமாகவும் இருக்குமா இல்லையா என்பது மிகப் பெரிய கேள்வி. ஆனால் இல்லை என்பதே பதில்.
கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் இன்சூரன்ஸ் பாலிசி (Insurance policy) எடுக்க விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் பிறரை விட அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். உண்மையில், நோய்த்தொற்று ஏற்பட்ட பின்னர் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்தால், அதிக பிரீமியம் செலுத்த வேண்டுமா? அல்லது, முன்பே எடுத்த இன்சூரன்ஸ் (Health Insurance) பாலிசிக்கும் அதிக premium தொகை செலுத்த வேண்டுமா? என்பது போன்ற பல குழப்பங்கள் , மக்களிடையே எழுந்துள்ளது.
Also Read | Covid-19 தடுப்பூசி Halal என்றால் இந்தோனேசிய மக்களின் கதி என்ன?
இதற்கான விளக்கத்தை ஐ.ஆர்.டி.ஏவின் கொள்கையின்படி காப்பீட்டுத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர். அதன்படி, ஏற்கனவே பாலிசி (Insurance policy) எடுத்த பாலிசிதாரர்களுக்கு எந்தவித மாற்றமும் இருக்காது. எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ள மாட்டார்கள், ஆனால் புதிய பாலிசியைப் பொறுத்தவரை, காத்திருப்பு கால நிபந்தனைகள் சேர்க்கப்படலாம்.
இருப்பினும், இந்த நிபந்தனைகள் நோயாளியின் (Patients) நிலையைப் பொறுத்தது. ஒரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனம் அவரது உடல்நிலையை சரிபார்க்கும். இதன் பின்னர், அதற்கேற்றாற் போல இன்சூரன்ஸ் பாலிசி வழங்கப்படும். அதற்கேற்றாற்போல பிரீமியம் நிர்ணயிக்கப்படும்.
Also Read | வாடிக்கையாளர்களுக்கு SBI அளிக்கும் good news: வருகின்றன 3000 புதிய ATM-கள்
கோவிட் நோயாளிகளுக்கு காப்பீட்டு நிபந்தனை
கோவிட் நோயாளியின் நிலைக்கு ஏற்ப, காப்பீட்டு நிறுவனம் புதிய பாலிசியை வழங்கும். அதாவது, கோவிட் பாதித்து குணமானவர்கள், பாதிப்பு சரியான 30, 60 அல்லது 90 நாட்களுக்குப் பிறகு பாலிசி கவரேஜ் தொடங்கும். காப்பீட்டு நிறுவனங்களின் கூற்றுப்படி, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு குணமடைந்த நோயாளிகளுக்கான காத்திருப்பு காலம் 30 முதல் 60 நாட்கள் ஆகும்.
நோயாளியின் நிலைக்கு ஏற்ப காப்பீடு வழங்கப்படும்
கோவிட் தொற்றுநோய் குணமடைய 4-6 வாரங்களுக்கு மேல் ஆகும் நோயாளிகளின் உடல்நல பரிசோதனைக்குப் பிறகு காப்பீட்டுக்த் திட்டம் வழங்கப்படும், ஏனெனில் இந்த நோயாளிகள் குணமடைந்த பிறகு, நுரையீரல், இதயம், மூளை, சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.
வென்டிலேட்டரில் இருக்கும் நோயாளிகளுக்கு பாலிசி வழங்கும்போது கூடுதல் கவனம் செலுத்தப்படும். பாதிப்பின் அளவு, ஆக்ஸிஜன் எடுத்துக் கொண்ட அளவு என்பதன் அடிப்படையில், அவர்களுக்கு புதிய காப்பீட்டுக் கொள்கையின் பிரீமியம் நிர்ணயிக்கப்படும். ஆனால் தற்போதுள்ள பாலிசிதாரர்களின் பிரீமியம் (premium) மாறாது.
Also Read | கன்னித்தன்மை பரிசோதனை இனி இல்லை Pakistan உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR