ஆகஸ்ட் மாதம் பிறந்தவரா நீங்கள்? அப்போ ‘இந்த’ மாதிரி கேரக்டரா இருப்பீங்க!
August Born People Traits : ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்களின் குணாதிசயம் குறித்தும், இங்கு பார்ப்போம்.
August Born People Traits : 12 மாதங்களில் 8வது மாதமாக வருகிறது, ஆகஸ்டு. இந்த மாதத்தில் இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் மழையும், ஒரு சில மாநிலங்களில் வெயிலும் அடிக்கும். பருவநிலை மட்டுமல்ல, இந்த மாதத்தில் பிறந்தவர்களின் குண நலன்களும் கூட ஒருவருக்கொருவர் மாறுபடும். நாம் பிறக்கும் மாதம், நமது குணாதிசயத்தையும் தேர்வு செய்யும் என சில தரவுகள் கூறுகின்றன. அந்த வகையில், ஆகஸ்டு மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயம் எப்படி இருக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்கள்:
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் தைரியமிக்கவர்களாகவும், மன உறுதி கொண்டவர்களாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி பல்வேறு நிறுவனங்களின் தலைமை அதிகாரியாக உருவாகும் திறமை அவர்களுக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மற்றவர்களின் பேச்சை கேட்பது போல தோன்றினாலும் இவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் செய்வார்களாம்.
மன கஷ்டம் அல்லது மனத் தொய்வு ஏற்படுகையில் அதை சரி செய்து கொள்ள வெளியூர் பயணங்கள் மேற்கொள்வது இவர்களின் வாடிக்கையாக இருக்குமாம். ஒரு சிலர் உடற்பயிற்சி செய்தும் தன் மனக்கசப்புகளை நீக்கி கொள்வராம். தன் மனதில் ஒரு முடிவை எடுத்து விட்டால் அதிலிருந்து பின்வாங்காத இவர்கள், தன் குறிக்கோளை முடித்துக் கொள்ள எந்த தூரத்திற்கு வேண்டுமானாலும் செல்வார்களாம். புதிய மனிதர்களை சந்தித்தாலும் ஏற்கனவே அவர்களை சந்தித்தது போல நெருங்கி பழகும் குணாதிசயம் கொண்டவர்கள் இவர்கள். இதில் ஒரு சிலருக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும் எனக் கூறப்படுகிறது. ஆனால் தனது எதிரிக்கும் கூட நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல மனமும் இவர்களுக்கு உள்ளது.
மாற்றிக் கொள்ள வேண்டியவை:
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள், தன்னைத்தானே அதிகமாக விமர்சித்துக் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம். இவர்கள் தன்னால் ஒரு காரியத்தை செய்து முடிக்க முடியவில்லை என்றால் தன்னை அதிகமாக நோகடித்துக் கொள்வதற்கு பதிலாக தன்னைத்தானே புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர்களிடம் அவர்களே குறையாக பார்த்துக் கொள்ளும் விஷயங்களை இனி நிறையாக பார்க்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர். தவறுகளில் இருந்து திருத்திக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | நீங்கள் வசீகரமான நபரா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க!
முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
>ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் , சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை மதிப்பவர்களாக இருப்பார்கள். இந்த குணம் அவர்களை பணத்தையும் நன்றாக கையாள உதவுகிறது. அவர்கள் தங்கள் சொந்த பணத்தை சேமிப்பதில் அல்லது வெவ்வேறு வருமான ஆதாரங்களில் முதலீடு செய்வதில் ஈடுபாடு காட்டுகிறார்கள். மிகவும் திறமையான இவர்கள், ஆடம்பரத்தையும் விரும்புகின்றனர்.
>ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் தன்னை தானே உற்சாகப்படுத்திக் கொள்பவராக இருப்பர். பிடிவாதம் மற்றும் ஆற்றல் மிக்கவ இவர்கள், அவர்களின் பாதையில் உள்ள தடைகளை முன் கூட்டியே தெரிந்து கொள்வதில் அவர்கள் எப்போதும் ஒரு படி மேலே இருப்பார்கள்.
>ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்கள், தனிமை விரும்பிகளாக இருப்பவர். இவர்கள் தனக்கு நெருக்கமான சில நண்பர்களை மட்டுமே வைத்துக்கொள்வர். தனது ரகசியங்களை பெரிதாக யாரிடமும் சொல்லாத இவர்கள், அவ்வளவு எளிதாக யாரையும் நம்பிவிட மாட்டார்கள்.
மேலும் படிக்க | 11:11 நம்பரை அடிக்கடி பார்க்கிறீர்கள? அதற்கு இதுதான் அர்த்தம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ