சந்திர கிரகணம் 2022 ராசி பலன்: மே 16 அன்று முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இந்த கிரகணம் இந்தியாவில் காணப்படாது. ஆகையால் கிரஹண விதிகளையும் இந்த நேரத்தில் கடைபிடிக்க வேண்டாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மே 16 அன்று பவுர்ணமி. பவுர்ணமியுடன் கூடிய சந்திர கிரகணத்திற்கு விசேஷ பலன் உண்டு. ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த கிரகணம் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். ஜோதிடத்தில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகியவை மங்களகரமானதாக கருதப்படுவதில்லை என்பதால், இந்த நேரத்தில் சில வேலைகளைச் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. 


2 நாட்களுக்குப் பிறகு நிகழவிருக்கும் இந்த சந்திர கிரகணம் வட தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் தெரியும். இந்த கிரகணம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபமான பலன்களை அளிக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம். 


மேஷம்: 
இந்த சந்திர கிரகணம் மேஷ ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களைத் தரும். தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். வேலையிலும் வெற்றி உண்டாகும்.


ரிஷபம்: 
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் சுபமானதாகும். இந்த காலத்தில் இவர்கள் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. இந்த காலத்தில் பெரிய வெற்றிகள் கிடைக்கும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிண்ட நாட்களாக நடக்காமல் இருந்த முக்கியமான வேலைகள் இப்போது முடியும்.


மேலும் படிக்க | சந்திர கிரகணம் 2022: கிரகணத்தின் போது மறந்தும் கூட செய்யக் கூடாதவை


சிம்மம்: 
இந்த சந்திர கிரகணம் சிம்ம ராசிக்காரர்களுக்கும் சாதகமாக அமையும். அவர்கள் சில இனிமையான தகவல்களைப் பெறக்கூடும். பண வரவு அதிகமாகும். அது அவர்களின் நிதி நிலையை பலப்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களால் அனுகூலமான சூழல் நிலவும். 


கடகம்: 
கடக ராசிக்கு சந்திரன் அதிபதி என்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் கெட்ட பலனை ஏற்படுத்தாது. சந்திர கிரகணத்தால் கடக ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் மட்டுமே கிடைக்கும். உறவுமுறைகள் மேம்படும். உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி காண்பீர்கள். 


கும்பம்: 
இந்த சந்திரகிரகணம் கும்ப ராசிக்காரர்களுக்கு சுபகாலத்தை அளிக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றியை காணலாம். புதிய பணிகளை தொடங்குவீர்கள். 


எனினும், இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும். சிறிய தவறும் இழப்பை ஏற்படுத்தலாம். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஆண்டின் முதல் சந்திர கிரகணம்: இந்த ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR