சந்திர கிரகணம் 2022: கிரகணத்தின் போது மறந்தும் கூட செய்யக் கூடாதவை

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 10, 2022, 06:27 PM IST
சந்திர கிரகணம் 2022: கிரகணத்தின் போது மறந்தும் கூட செய்யக் கூடாதவை title=

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலையில் சந்திர கிரகணம், வரும் 16 ம் தேதி (2022, மே 16) அன்று நிகழ உள்ளது. 

மே 16-ம் தேதி இந்த சந்திர கிரகணம் விருச்சிக ராசியில் கிரகணம் ஏற்படுகிறது. இது தவிர அன்று விசாக நட்சத்திரம். இந்த சந்திர கிரகணத்தின் நாளில் உருவாகும் கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் சேர்க்கை 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும்.

கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை

1. தர்ப்பை அல்லது துளசி இலைகளை உணவு மற்றும் தண்ணீரில் போடவும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு அவற்றை உட்கொள்ளலாம்.

2. கிரகண காலத்தில், ஸ்தோத்திரங்கள் சொல்வதனா, கிடைக்கும் பலன்கள் பன்மடங்காகும்.

மேலும் படிக்க | மே 2022 மாத ராசி பலன்: மேஷம் முதல் கடகம் வரை

3. கிரகணத்தின் போது, ​​கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுங்கள்.

4. வீட்டின் பூஜை அறை கதவை மூடி வைக்கவும். அப்போது கோவில்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும்.

5. கிரகணம் முடிந்ததும் குளித்து விட்டு தான் பிற வேலைகளை தொடங்க வேண்டும். 

கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை

1. கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எனவே இந்த நேரத்தில் எந்த சுப காரியமும் செய்யக்கூடாது.

2. கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

3. சூரிய கிரகணத்தின் போது, ​​உணவு சமைக்கவோ, காய்கறியை நறுக்குதல் மற்றும் உரித்தல் போன்ற வேலை செய்யவோ, உணவு உண்ணவோ கூடாது.

4. குறிப்பாக கர்ப்பிணிகள் இந்த நேரத்தில் கத்தி-கத்தரிக்கோல் அல்லது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது, அவற்றைக் கையில் எடுக்கக்கூடாது.

5. கிரகணத்தின் போது ஊசியில் நூல் கோர்ப்பது, தையல் வேலை பார்ப்பது போன்றவை கூடாது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Solar Eclipse: கிரகணத்தின் போது சூரியனின் அருளைப் பெற செய்ய வேண்டியவை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News