ராசி மாறுகிறார் புதன்: இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும், புகழ் ஓங்கும்
Mercury transit: செல்வம், புத்திசாலித்தனம், தர்க்கம், வியாபாரம் ஆகியவற்றின் காரணியான புதன் கிரகம் மேஷ ராசியில் பிரவேசிப்பது 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றுகிறது. கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் கிரகம் நாளை அதாவது ஏப்ரல் 8, 2022 அன்று ராசியை மாற்றுகிறது.
புதன் மேஷ ராசிக்கு மாறவுள்ளார். செல்வம், புத்திசாலித்தனம், தர்க்கம், வியாபாரம் ஆகியவற்றின் காரணியான புதன் கிரகம் மேஷ ராசியில் பிரவேசிப்பது 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். அதிக அளவில் பணம் சம்பாதிப்பார்கள். வருமானம் அதிகரிக்கும் மற்றும் பணம் சம்பாதிக்க புதிய வழிகளும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறலாம். புதிய வேலையைத் தொடங்கலாம். முதலீடு செய்வதற்கும் இது ஒரு நல்ல நேரமாக இருக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் பல நல்ல செய்திகளை அளிக்கும். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியன கிடைக்க இந்த காலத்தில் நல்ல வாய்ப்புகள் உள்ளன.
மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் பம்பர் பரிசு
வியாபாரிகள் அதிக லாபம் பெறலாம். வியாபாரிகளுக்கு பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். மொத்தத்தில், இந்த நேரம் முன்னேற்றம், பணம், மரியாதை மற்றும் அனைத்து நல்ல விஷயங்களையும் கொண்டு வரும். எதிரிகள் மீதும் வெற்றி பெறுவீர்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் அதிகப் பணவரவைத் தரும். நினைத்துக்கூட பார்த்திராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். சிக்கியிருந்த பணம் திரும்ப கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். குறிப்பாக ஊடகங்கள், பொழுதுபோக்குத் துறை மற்றும் வக்கீல் தொழில் செய்பவர்களுக்கும், இவற்றுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரிபவர்களுக்கும் இந்த காலம் வரப்பிரசாதமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR