லண்டனில் உலகப் புகழ் பெற்ற மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் யோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை விரைவில் நிறுவப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லண்டனில் உலகப் புகழ் பெற்ற மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் சினிமா, விளையாட்டு, அரசியல், பொதுச்சேவை போன்ற பல திரையில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்படுவது வழக்கம். இந்த வரிசையில் தற்போது யோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது. 


இந்த அருங்காட்சியகம் லண்டன், சிங்கப்பூர், ஹாங்காங், பாங்காக், டெல்லி ஆகிய நகரங்களில் உள்ளது. தற்போது யோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலையை லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. லண்டன் வடிவமைப்பாளர்கள் ராம்தேவை சந்தித்து பல கோணங்களில் அளவு எடுத்து சென்றுள்ளனர். விரைவில் இந்த சிலை லண்டன் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.