பிப்ரவரி 19 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: 30 நாட்களுக்கு இக்கட்டான நிலை
Astrology: குருவின் அஸ்தமன காலத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என இந்த பதிவில் காணலாம்.
வேத ஜோதிடத்தில் கிரக அஸ்தமனம் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. சூரியனுக்கு மிக அருகில் வருவதால் ஒவ்வொரு வருடமும் சில நாட்களுக்கு சில கிரகங்கள் வானில் தெரிவதில்லை. ஆண்டின் இந்த நாட்களையும் கிரகங்களின் இந்த நிலையையும் கிரஹ-அஸ்தம், கிரஹ-லோபம், கிரஹ-மௌத்யம் அல்லது கிரஹ-மௌத்யமி என்று கூறுகிறோம். திருமணம், பதவியேற்பு போன்ற சுப காரியங்கள் பெரும்பாலானவை சுக்கிரன் மற்றும் வியாழனின் அஸ்தமன நிலையில் செய்யப்படுவதில்லை.
இந்த ஆண்டு, வியாழன் கிரகம் பிப்ரவரி 19 ஆம் தேதி அஸ்தமிக்கிறது. மார்ச் 20 ஆம் தேதி வரை இந்த நிலை நீடிக்கும். குருவின் இந்த அஸ்தமன காலத்தில், திருமணம், மொட்டையடித்தல், பெயர் சூட்டுதல் போன்றவை செய்யப்படுவதில்லை. வியாழன் அஸ்தமனம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாதகமான பலன்களை ஏற்படுத்தும் என்பதை ஜோதிடர் மதன் குப்தா சபாது கூறுகிறார்.
இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்
மேஷம் - மேஷ ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் வேலை மற்றும் வியாபாரத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உங்கள் மேலதிகாரியுடன் கருத்து வேறுபாடு அல்லது சில குழப்பங்கள் வரலாம். விருப்பம் இல்லாவிட்டாலும் பயணம் செய்ய நேரிடலாம். கூட்டாளருடனான உறவு பாதிக்கப்படலாம். பண விஷயத்திலும் தடைகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த காலத்தில் பொறுமை காப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்கள், மூத்த சகோதரர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். இதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
ரிஷபம் - ரிஷப ராசியினருக்கு வியாழன் அஸ்தமனம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் வியாழனின் இந்த நிலை இவர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் சிக்கலைத் தரும். இருப்பினும், புதிய வேலைக்கான தேடல் முடிந்து வேலை கிடைக்கும். இக்காலத்தில் திட்டமிட்டு உழைத்தால் லாபம் கிடைக்கும். தேவையற்ற செலவுகளை நிறுத்துங்கள். வருமானத்திற்கு அதிகமாக பணம் செலவு செய்வது மன உளைச்சலை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | அன்னை மகாலட்சுமியின் மனம் குளிர்ந்து செல்வம் கொழிக்க செய்ய வேண்டியவை!
மிதுனம் - வியாழனின் இந்த நிலை உங்கள் விதியை பாதிக்கிறது. மிதுன ராசிக்காரர்கள் தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டி வரும். இந்த நேரத்தில், நீங்கள் தேவையில்லாமல் பயணம் செய்ய வேண்டியிருக்கும். வியாபாரத்தில் லாபம் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குழந்தைகளைப் பற்றிய கவலைகள் அதிகரிக்கலாம். பண விஷயத்தில் திடீர் லாபம் வரும் சூழ்நிலை உருவாகும். வருமான ஆதாரத்தில் அதிகரிப்பு இருக்கலாம். புத்திசாலித்தனமாக பணத்தை முதலீடு செய்யுங்கள். இந்த காலத்தில் அவசரமாக முடிவெடுக்க வேண்டாம். உங்கள் வாழ்க்கை துணையுடன் பதற்றம் ஏற்பட அனுமதிக்காதீர்கள். சில நாள்பட்ட நோய்கள் தோன்றக்கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
கடகம் - இலக்கை அடைவதில் சிரமம் ஏற்படலாம். இதன் காரணமாக பணியிடத்தில் மரியாதை குறையும். பொறுப்புகள் குறையும். இந்த நிலை மன உளைச்சலை ஏற்படுத்தும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். உங்களுக்கு நாள்பட்ட நோய் இருந்தால், அதைப் பற்றி தீவிரமாக இருக்க வேண்டியது அவசியம். உடல்நலம் விஷயத்தில் எந்த விதமான அலட்சியமும் உங்களுக்கு நல்லதல்ல. வியாபாரத்தில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். இழப்பு ஏற்படலாம். இந்த காலத்தில் பொறுமை காப்பது நல்லது. எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருங்கள்.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள் வியாழனின் இந்த நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் உறவுகள் பாதிக்கப்படலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தகராறு உருவாகும் சூழ்நிலை ஏற்படக்கூடும். தவறான நபர்களை தவிர்ப்பது நல்லது. எதிரிகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். ஜாக்கிரதை தேவை. எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். முதலாளி அல்லது உயர் பதவியில் இருப்பவர்களுடனான உறவுகள் மோசமடையலாம். இதில் கவனமாக இருங்கள். வியாபாரத்தில் லாபம் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆணவம் மற்றும் கோபத்தைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR