இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்

Horoscope February 10, 2022: இன்று, அதாவது வியாழக்கிழமை சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். மறுபுறம், துலா ராசிக்காரர்களின் நிதி நிலைமையை மேம்படுத்தவும் இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 13, 2022, 05:38 AM IST
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • மகர ராசிக்காரர்கள் உங்கள் காதலை சொல்ல திட்டமிட்டிருந்தால், இன்று அதற்கான நாளாக இருக்கும்.
  • மிதுன ராசிக்காரர்கள் இன்று மண வாழ்வில் மகிழ்ச்சி அடைவீர்கள்.
இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும் title=

ராசிபலன் பிப்ரவரி 10, 2022: ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரக மாற்றங்கள் ராசிகளில் பல வித தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இந்த மாதம் பல வித கிரக மாற்றங்களுக்கான மாதமாக உள்ளது. ஜோதிட குரு பெஜான் தருவாலாவின் மகன் சிராக் தருவாலா, இன்றைய நாள் அனைத்து ராசிகளுக்கும் எப்படிப்பட்ட பலன்களைக் கொண்டு வரும் என கணித்துள்ளார். அந்த விவரங்களை இங்கே காணலாம். 

மேஷம்: இன்று உங்கள் காதல் உறவில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். உங்களுக்கு நெருக்கமானவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவையும் பாசத்தையும் நீங்கள் பெறுவீர்கள். 

ரிஷபம்: இந்த வியாழன் அன்று நீங்கள் மகிழ்ச்சியான மற்றும் நிறைவான திருமண வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். மேலும், உங்களுக்கு ஆன்மீக அனுபவமும் ஏற்படலாம். மக்கள் உங்கள் பக்கம் ஈர்க்கப்படுவார்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மீது நீங்கள் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துவீர்கள். 

மிதுனம்: இன்று மண வாழ்வில் மகிழ்ச்சி அடைவீர்கள். மேலும், இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் அழகான உறவை அனுபவிப்பீர்கள். உங்கள் காதலியின் முன் அன்பை வெளிப்படையாக வெளிப்படுத்த இது ஏற்ற நாள்.

கடகம்: இந்த வியாழன் கடக ராசிக்காரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் உணர்ச்சி ரீதியான தூரத்தை அகற்ற ஒரு நல்ல நேரமாக இருக்கும். உங்கள் அணுகுமுறையில் நீங்கள் அதிக உணர்திறன் உடையவராக மாறுவீர்கள். உங்கள் மனநிலை மிகவும் நிலையற்றதாக இருக்கும். உங்கள் தோற்றம் அல்லது உடையில் சில மாற்றங்களைச் செய்ய நீங்கள் முடிவு செய்யலாம்.

சிம்மம்: வியாழன் அன்று உங்கள் காதல் உறவுகள் சாதகமாக இருக்கும். உறவில் உள்ள அனைத்து விதமான கருத்து வேறுபாடுகளும் எளிதில் தீர்க்கப்படும். இதனுடன், நீங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து உதவி மற்றும் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நீங்கள் சுப காரியங்களை ஏற்பாடு செய்யக்கூடும். இன்று நீங்கள் சில நல்ல செய்திகளையும் பெறலாம்.

கன்னி: இந்று நீங்கள் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். அன்புக்குரியவர்களுடன் சண்டைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அது மோதலாக உருவாக அனுமதிக்காதீர்கள். விஷயங்கள் கையை விட்டுப் போகும் முன் அவற்றை சரிசெய்து விடுவது நல்லது. உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தவும். வணிகர்கள் இப்போது தங்கள் விரிவாக்கத் திட்டங்களைத் தொடரலாம்.

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு காதலை சொல்ல இது சரியான நேரம்: மிஸ் பண்ணிடாதீங்க

துலாம்: வியாழன் அன்று, துலா ராசிக்காரர்கள் உங்கள் இனிமையான மற்றும் மென்மையான பேச்சின் மூலம் உங்கள் காதன் / காதலியின் இதயத்தை வெல்வீர்கள். உங்கள் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வியாழன் உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்த ஒரு நல்ல நாளாக இருக்கும்.

விருச்சிகம்: இந்த வியாழக்கிழமை உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஈகோ மோதல் திருமண உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தும். இது தவிர, மிகவும் பழைய நண்பர் ஒருவருடனும் சச்சரவு ஏற்படலாம். தீவிர வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். 

தனுசு (தனுசு): வியாழன் அன்று, உங்கள் அன்பான தருணங்களில் மகிழ்ச்சியான பிரகாசம் இருக்கும். நீங்கள் பழைய தவறான எண்ணங்களைப் பற்றி சிந்தித்து அவற்றை அகற்றுவதற்கான வழிகளைப் பார்ப்பீர்கள். புதிய நண்பர்களை உருவாக்கி குழு நடவடிக்கைகளில் பங்கேற்பீர்கள். குடும்ப உறவினர் ஒருவர் உங்களுக்கு உதவியாக இருப்பார்.

மகரம்: உங்கள் காதலை சொல்ல திட்டமிட்டிருந்தால், இன்று அதற்கான நாளாக இருக்கும். திருமணமான தம்பதிகள் அன்பையும் மகிழ்ச்சியையும் அனுபவிப்பார்கள். மன அழுத்தத்தைக் குறைக்கவும், நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை கழிக்கவும் இன்று நல்ல நாளாக இருக்கும். 

கும்பம்: இன்று நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தவறான புரிதல் ஏற்படக்கூடும். உண்மைகள் ஆதாரமற்று திரிக்கப்பட்டு தனிப்பட்ட உறவுகளில் அவநம்பிக்கை மற்றும் அதிர்ச்சிக்கு வழிவகுக்கும். கும்ப ராசிக்காரர்கள் சிறந்த முடிவுகளுக்கு பொறுமையைக் கடைபிடிப்பது மிக அல்லது. 

மீனம்: இன்று உங்கள் குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். உங்கள் திருமண வாழ்க்கை சில காதல் தருணங்களுடன் அழகான திருப்பத்தைக் காணும். ஆர்வங்கள், அனுபவங்கள் மற்றும் யோசனைகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும்.

மேலும் படிக்க | செவ்வாயின் மாற்றத்தால் இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை: உங்க ராசி என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News