Bajaj Pulsar NS, RS Series Updates: பஜாஜ் ஆட்டோ தனது பிரபலமான மோட்டார் பைக் பல்சர் என்எஸ் மற்றும் பல்சர் ஆர்எஸ் (Pulsar NS and RS series) தொடரின் இரண்டு புதிய மாடல்களை பண்டிகை காலத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தியது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் படி, பல்சர் ஆர்எஸ் 200 (Pulsar RS200) இரட்டை ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) கொண்டுள்ளது. இதன் விலை ரூ .1,52,179.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதே நேரத்தில், பல்சர் என்எஸ் 200 (Pulsar NS200) இன் விலை ரூ .1,31,219. பல்சர் என்எஸ் 160 இன் புதிய பதிப்பையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லி ஷோரூமில் இதன் விலை ரூ .1,08,589.


இந்த புதிய மாடல்கள் அக்டோபர் 23 முதல் அதன் டீலர்ஷிப் கடைகளில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பஜாஜ் ஆட்டோவின் மார்க்கெட்டிங் தலைவர் நாராயண் சுந்தரமனின் (Narayan Sundararaman) கூற்றுப்படி, பல்சர் ஆர்எஸ் 200 மற்றும் என்எஸ் 200 எப்போதும் செயல்திறனைப் பொறுத்தவரை சர்வதேச தொழில்நுட்பத்துடன் முற்றிலும் மாறுபட்டவை.


முன்னதாக, பஜார் ஆட்டோ பல்சர் 125 இன் இரண்டு இருக்கைகள் கொண்ட பதிப்பை அறிமுகப்படுத்தியது. ஷோரூமில் இதன் விலை ரூ .79,091. இதுக்குறித்து நிறுவனம் கூறுகையில், இது 125 சிசி பிஎஸ்-வி டிடிஎஸ்ஐ எஞ்சின் கொண்டுள்ளது. இது 5 கியர்களைக் கொண்டுள்ளது. மேலும், டிரைவரின் இருக்கை மற்றும் பின்புற இருக்கை வேறு ஆகும்.


ALSO READ | வீடியோ: உலகத்ல யாராலும் இவங்கள மாதிரி bike எடுக்க முடியாது!


பல்சர் 125 சிசி மாறுபாடு கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பல்சர் தொடரின் சிறந்த விற்பனையான மோட்டார் பைக் ஆகும். அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குள் நிறுவனம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மோட்டார் பைக்களை விற்பனை செய்தது.


பஜார் ஆட்டோ 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் பல்சர் 180 எஃப் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ .87,450 ஆக வைக்கப்பட்டது. இந்த மாதிரி பல்சர் 180 நியான் என பட்டியலிடப்பட்டு நியான் ஆரஞ்சு வண்ணத்தில் வந்தது. பல்சர் 180 எஃப் மாடல் 220 எஃப் உடன் மிகவும் ஒத்திருந்தது. 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR