2018 - 2019 நிதியாண்டு முடிவடைவதையொட்டி, வருகிற மார்ச் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்றைய தினம் வங்கிகள் அனைத்தும் இயங்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருகிற மார்ச் 31 ஆம் தேதியுடன் 2018 - 2019 நிதியாண்டு முடிவடைவதையொட்டி, அன்றைய தினம், நாட்டில் அனைத்து நிறுவனங்களும் தங்களது வரவு செலவு கணக்கை முடிக்கும் சூழ்நிலையில் இருக்கும். இந்தாண்டு மார்ச் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்று வங்கிகள் இயங்காமல் இருந்தால் அது அரசுக்கும், நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது அன்று செலவாகும் கணக்கை ஏப்ரல் 1 ஆம் தேதி தான் பதிவு செய்யவேண்டிய நிலை இருக்கும். 


எனவே, மார்ச் 31 ஆம் தேதி அன்று அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் இயங்க வேண்டும் என்று RBI அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் RBI அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 


மேலும், மார்ச் 30 மற்றும் மார்ச் 31 ஆகிய தேதிகளில் ஆன்லைன் பணபரிவார்த்தனையும் செய்யலாம். வங்கிகளில் கவுண்டர்கள் வருகிற மார்ச் 30 ஆம் தேதி இரவு 8 மணி வரையிலும் மார்ச் 31 அன்று மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று காசோலை பெறுதல் மற்றும் செலுத்துதல் உள்ளிட்டவையும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.