Bank FD Interest HIke: ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்த பிறகு, பல வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. வட்டி விகித உயர்வு, கடன் வாங்குபவர்களுக்கு சுமை என்பதால் பெரும்பாலனவர்களின் கவலைகள் அதிகரிக்கும் நிலையில், சிலருக்கு மட்டும் சிறிய அளவிலான நன்மைகள் கிடைக்கும். அதாவது வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பவர்களுக்கு இனிமேல் அதிக வட்டி கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல சிறிய நிதி வங்கிகள் பெரிய வங்கிகளை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இவற்றில் முதலீடு செய்வதன் மூலம் விரைவில் பணம் இரட்டிப்பாகும். இன்றைய காலகட்டத்தில், வங்கிகளில் நீண்ட காலத்திற்கு வைக்கப்படும் வைப்புத்தொகை என்பது, சிறந்த முதலீட்டுத் தேர்வாகக் கருதப்படுகிறது.


ஏதேனும் வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் செய்யத் திட்டமிட்டிருந்தால், உங்கள் பணம் எத்தனை மாதங்களில் இரட்டிப்பாகும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். அரசு வங்கிகளைத் தவிர, பல சிறு நிதி வங்கிகளும் FDகளுக்கு நல்ல வருமானத்தை அளிக்கின்றன.


மேலும் படிக்க | வீடு வாங்க கடன் வாங்க போறீங்களா... பெண்களுக்கு குறைந்த வட்டி கொடுக்கும் வங்கிகள்!


உயர்ந்தது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம்
பிப்ரவரி முதல் வாரத்தில், ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை மதிப்பாய்வில், ரெப்போ விகிதத்தை (RBI Hikes Repo Rate) அதிகரிப்பதாக அறிவித்தது, அதன் பிறகு பல வங்கிகள் நிலையான வைப்புகளுக்கான விகிதங்களை அதிகரித்தன. 


வங்கிகளின் வட்டி விகிதங்கள்


எந்தெந்த வங்கிகள் உங்களுக்கு 9 சதவீதத்திற்கு மேல் வட்டி வழங்குகின்றன என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். பல சிறு நிதி வங்கிகள் நிலையான வைப்புகளுக்கு நல்ல வட்டியை வழங்குகின்றன.


யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது FDக்கு அதிக வட்டி அளிக்கிறது. இந்த வங்கி உங்களுக்கு 101 நாட்களில் FDக்கு 9% வரை வட்டியும், மூத்த குடிமக்களின் டெபாசிட்களுக்கு 9.50% வரை வட்டியும் வழங்குகிறது.


மேலும் படிக்க | வீட்டு கடன் வாங்கப்போறீங்களா? அப்போ...உங்களுக்குதான் இந்த பதிவு!!


உத்கர்ஷ் சிறு நிதி வங்கி
Utkarsh Small Finance வங்கி, மற்ற வங்கிகளை விட FDக்கு அதிக வட்டியை வழங்குகிறது. இது 101 நாட்கள் FDக்கு 8% வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 8.75% வட்டியையும் வழங்குகிறது.


நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி உங்களுக்கு சிறந்த வட்டியை வழங்குகிறது. இது 101 நாட்களில் FDக்கு 8% வட்டியையும் மூத்த குடிமக்களுக்கு 8.75% வட்டியையும் வழங்குகிறது.


உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியும் மற்ற வங்கிகளை விட FDக்கு அதிக வட்டி தருகிறது. இது 101 நாட்களில் FDக்கு 8% வட்டியையும் மூத்த குடிமக்களுக்கு 8.75% வட்டியையும் வழங்குகிறது.


மேலும் படிக்க | Old vs New Tax Regime: எதை தேர்ந்தெடுத்தால் அதிக லாபம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ