Old vs New Tax Regime: எதை தேர்ந்தெடுத்தால் அதிக லாபம்?

Old vs New Tax Regime:  புதிய வரி விதிப்பை கவர்ச்சிகரமானதாக மாற்ற, பழைய வரி முறையைப் போலவே புதிய வரி முறையிலும் ரூ.50,000 நிலையான விலக்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 7, 2023, 04:04 PM IST
  • தற்போது புதிய வரி விதிப்பு இயல்புநிலை வரி விதிப்பாக மாற்றப்பட்டுள்ளது.
  • இதனுடன், பழைய வரி முறையும் ஒரு விருப்பமாக வைக்கப்பட்டுள்ளது.
  • அதாவது, வரி செலுத்துவோர் விரும்பினால், பழைய வரி முறையின் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து அதன் கீழ் வருமானத்தை தாக்கல் செய்யலாம்.
Old vs New Tax Regime: எதை தேர்ந்தெடுத்தால் அதிக லாபம்? title=

பழைய மற்றும் புதிய வரி முறை: எதை தேர்வு செய்ய வேண்டும்?: வரி செலுத்துவோருக்கு இந்த முறை வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இந்த நிதியாண்டிலிருந்து (FY23) தனிநபர் வருமான வரியில் மத்திய அரசு பல மாற்றங்களைச் செய்துள்ளது. 2023-ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போது புதிய வரி விதிப்பு இயல்புநிலை வரி விதிப்பாக மாற்றப்பட்டுள்ளது என்று அறிவித்திருந்தார். 
இதனுடன், பழைய வரி முறையும் ஒரு விருப்பமாக வைக்கப்பட்டுள்ளது. அதாவது, வரி செலுத்துவோர் விரும்பினால், பழைய வரி முறையின் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து அதன் கீழ் வருமானத்தை தாக்கல் செய்யலாம். புதிய வரி விதிப்பை கவர்ச்சிகரமானதாக மாற்ற, பழைய வரி முறையைப் போலவே புதிய வரி முறையிலும் ரூ.50,000 நிலையான விலக்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த பதிவில் இரண்டு வரி முறையின் ஒப்பீட்டையும் காணலாம். இதன் மூலம் உங்கள் சம்பளத்திற்கு ஏற்ப சரியான முறையை நீங்கள் தேர்வு செய்யலாம்.

புதிய வரி முறையில் உங்களுக்கு என்ன கிடைக்கும்?

புதிய வரி விதிப்பில், இப்போது வரி அடுக்குகள் 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இப்போது 3 லட்சம் வருமானத்தில் பூஜ்ஜியம், 3 முதல் 6 லட்சம் வருமானத்தில் 5%, 6 லட்சத்தில் இருந்து 9 லட்சம் வரை 10%, 9 லட்சத்தில் இருந்து 12 லட்சம் வரை 12% லட்சம், 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20% வரி, 15 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் 30% வரி செலுத்த வேண்டும். புதிய வரி முறையில் 50,000 வரை நிலையான விலக்கும் கிடைக்கும். இது தவிர, 7.5 லட்சம் வரை சம்பளத்தில் வரி தள்ளுபடி கிடைக்கும்.

7.5 லட்சம் சம்பளத்தில் புதிய வரி விதிப்பில் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?

- சம்பள வருமானம்: 7.5 லட்சம்
- நிலையான விலக்கு - 50 ஆயிரம்
- புதிய வருமான வரி முறையில் 80சி விலக்கு கிடைக்காது
- மொத்த வருமானம் - 7 லட்சம்
- மொத்த வரி பொறுப்பு: 25 ஆயிரம் (3-6 லட்சத்திற்கு ரூ.15,000 மற்றும் 6-7 லட்சத்திற்கு ரூ.10,000)
- பிரிவு 87A இல் தள்ளுபடி: 25 ஆயிரம்
- நிகர வரி பொறுப்பு: இல்லை

மேலும் படிக்க | விஆர்எஸ் வாங்குவது நல்லதா? யாருக்கு இது பலனளிக்கும்? யாருக்கு பிரச்சனை?

7.5 லட்சம் சம்பளத்தில் பழைய வரி முறையில் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?

- சம்பள வருமானம்: 7.5 லட்சம்
- நிலையான விலக்கு - 50 ஆயிரம்
- 80C விலக்கு: 1.5 லட்சம்
- மொத்த வருமானம் - 5.5 லட்சம்
- மொத்த வரி பொறுப்பு: ரூ. 22,500 (2.5-5 லட்சத்திற்கு ரூ.12,500 மற்றும் 5-5.5 லட்சத்திற்கு ரூ.10,000)
- பிரிவு 87A இல் தள்ளுபடி: தாக்கல் இல்லை (பழைய வரி முறையில், 5 லட்சம் வரையிலான வருமானத்திலேயே தள்ளுபடி உண்டு.)
- நிகர வரி பொறுப்பு: ரூ. 22,500 (+செஸ்)

புதிய வரி முறையில் 10 லட்சம் சம்பளத்திற்கு எவ்வளவு வரி கட்ட வேண்டும்?

- சம்பள வருமானம்: 10 லட்சம்

- நிலையான விலக்கு - 50 ஆயிரம்

- ஓய்வூதியத்தில் விலக்கு: 50 ஆயிரம்

- மொத்த வருமானம்: 9 லட்சம்

- பிரிவு 87A இன் கீழ் தள்ளுபடி: இல்லை

- செஸ்: 4%

- நிகர வரி பொறுப்பு: 45,000

பழைய வரி முறையில் கழிப்புடன் 10 லட்சம் சம்பளத்திற்கு எவ்வளவு வரி விதிக்கப்படும்?

- சம்பள வருமானம்: 10 லட்சம்

- 80C விலக்கு: 1.5 லட்சம்

- வங்கி வட்டியில் லாபம்: 20,000

- வீட்டுக் கடன் வட்டி விகிதம்: 2 லட்சம்

- நிலையான விலக்கு - 50 ஆயிரம்

- ஓய்வூதியத்தில் விலக்கு: 50 ஆயிரம்

- மொத்த வருமானம்: 5.7 லட்சம்

- பிரிவு 87A இன் கீழ் தள்ளுபடி: 26,500

- செஸ்: 4%

- மொத்த வரி பொறுப்பு: 27,560

மேலும் படிக்க | Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு ஜாக்பாட், பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறலாம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News