Gold Loan: குறைந்த வட்டியில் நகை கடன்களை வழங்கும் ‘சில’ வங்கிகள்!

குறைந்த வட்டியில் நகைக் கடன்: எளிய மக்கள் தங்களின் அவசர தேவைகளுக்கு நகைக் கடன்களையே அதிகம் நம்பி இருக்கின்றனர். அவசர பணத் தேவைகளை பூர்த்தி செய்ய நகைக் கடன்கள், கை கொடுக்கும் ஆபத்பாந்தவன்களாக இருக்கின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 12, 2023, 03:01 PM IST
  • நகைக் கடன்களுக்கு குறைந்த வட்டி வசூலிக்கும் சில வங்கிகள்.
  • ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் பான் கார்டு அவசியம்.
  • எளிய மக்கள் தங்களின் அவசர தேவைகளுக்கு நகைக் கடன்களையே அதிகம் நம்பி இருக்கின்றனர்.
Gold Loan: குறைந்த வட்டியில் நகை கடன்களை வழங்கும் ‘சில’ வங்கிகள்! title=

குறைந்த வட்டியில் நகைக் கடன்: அவசர பணத் தேவைகளை பூர்த்தி செய்ய நகைக் கடன்கள் (Gold Loan) கை கொடுக்கும் ஆபத்பாந்தவன்களாக இருக்கின்றன. எளிய மக்கள் தங்களின் அவசர தேவைகளுக்கு நகைக் கடன்களையே அதிகம் நம்பி இருக்கின்றனர். ஏனெனில், நகைக் கடன்களுக்கு பிணை ஏதும் தேவை இல்லை. நீங்கள் கொடுக்கும் தங்க நகையின் மதிப்புக்கு ஏற்ப கடன் தொகை வழங்கப்படும். கடன் தொகை பொதுவாக வழங்கப்படும் தங்கத்தின் அளவு மற்றும் தூய்மையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மற்ற வகை கடன்களை போல அல்லாமல் மிக விரைவில் நகைக் கடன்களை வாங்கி சென்றுவிடலாம்.

நகைக் கடன்கள் வாங்கும் போது குறைந்த வட்டிக்கு எந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் நகைக் கடன் வழங்குகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். தற்போதைய சூழலில் நகைக் கடன்களுக்கு குறைந்த வட்டி வசூலிக்கும் சில வங்கிகளை பார்க்கலாம். தங்கக் கடனைப் பெற ஆர்வமுள்ளவர்களுக்கு, குறைந்த வட்டி விகிதங்களை கடன்கள் வழங்கும் 10 வங்கிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

HDFC வங்கி: செயலாக்கக் கட்டணம் 1 சதவிகிதம்; வட்டி 7.20 சதவீதம் முதல் 11.35 சதவீதம் வரை 

கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank): வட்டி 8 சதவீதம் முதல் 17 சதவீதம் வரை; செயலாக்க கட்டணம் 2 சதவீதம் மற்றும் ஜிஎஸ்டி.

யூனியன் வங்கி (Union Bank): வட்டி 8.40 சதவீதம் முதல் 9.65 சதவீதம் வரை.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India): வட்டி 8.45 சதவிகிதம் முதல் 8.55 சதவிகிதம்; கடன் தொகையில் 0.5 சதவிகிதம் செயலாக்கக் கட்டணம்.

மேலும் படிக்க | வீடு வாங்க கடன் வாங்க போறீங்களா... பெண்களுக்கு குறைந்த வட்டி கொடுக்கும் வங்கிகள்!

யூகோ வங்கி (Uco Bank): 8.50 சதவீதம் செயலாக்கக் கட்டணம் ரூ. 250 முதல் ரூ. 5,000 வரை.

எஸ்பிஐ (SBI): 0.50 சதவிகிதம் மற்றும் ஜிஎஸ்டியுடன் செயலாக்கக் கட்டணத்துடன் 8.55 சதவிகிதம்.

இண்டஸ் இண்ட் வங்கி (IndusInd Bank(: 8.75 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை செயலாக்கக் கட்டணம் 1 சதவீதம்.

பஞ்சாப் சிந்து வங்கி (Punjab and Sindh Bank): 8.85 சதவீத வட்டி; செயலாக்கக் கட்டணம் ரூ. 500 முதல் ரூ. 10,000 வரை.

பெடரல் வங்கி: 8.89 சதவீத வட்டி.

பஞ்சாப் நேஷனல் வங்கி: 0.75 சதவீத செயலாக்கக் கட்டணத்துடன் 9 சதவீத வட்டி.

தங்கக் கடனுக்கான திருப்பிச் செலுத்தும் காலம் வாடிக்கையாளரின் விருப்பம் மற்றும் வங்கிகளின் சில நிபந்தனைகளைப் பொறுத்தது. நகைக் கடன் வாங்க திட்டமிட்டிருந்தால், ரூ. 25 லட்சத்துக்கும் மேலான நகைக் கடன் தொகைக்கு ஐடிஆர் அவசியம் என்பதையும், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் பான் கார்டு அவசியம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். பான் கார்டு இல்லாமல் நகைக் கடன் பெறுவது கடினம்.

மேலும் படிக்க | வீட்டு கடன் வாங்கப்போறீங்களா? அப்போ...உங்களுக்குதான் இந்த பதிவு!!

மேலும் படிக்க | Old vs New Tax Regime: எதை தேர்ந்தெடுத்தால் அதிக லாபம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News