மார்ச் மாதம் முடிந்து, தற்போது புதிய நிதியாண்டு துவங்கி 11 நாட்கள் ஆன நிலையில், வரவிருக்கும் நாட்களில் எத்தனை விடுமுறை என்பது குறித்து பார்க்கலாம். இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் மாதத்திற்காக விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் வார விடுமுறை உட்பட 15 நாட்கள் வங்கி விடுமுறையாகும். இதன் மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் முன் கூட்டியே தங்களது வங்கி வேலைகளை திட்டமிட்டு செய்து கொள்ள இது பயனுள்ளதாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உண்மையில், இந்த வாரம் வங்கிகள் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். இதற்குப் பிறகு, வியாழக்கிழமை முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். இதில், ஒரு நாள், அதாவது ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருக்கும், மீதமுள்ள மூன்று நாட்கள் பண்டிகை நாள் ஆகும். இதில் மாநில அளவிலான விடுமுறைகள், பகுதி அளவிலான விடுமுறையும் சேர்த்தே கணக்கிடப்படும்.


மேலும் படிக்க | தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை


பொது மற்றும் வார வங்கி விடுமுறை நாட்கள்
ஏப்ரல் 14: வியாழக்கிழமை அன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி. இது தவிர மகாவீர் ஜெயந்தி, பைசாகி, தமிழ் புத்தாண்டு, பிஜூ பண்டிகை, போன்றவை கொண்டாடப்படும். இந்த நாளில் ஷில்லாங் மற்றும் சிம்லாவைத் தவிர தவிர மற்ற இடங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
ஏப்ரல் 15: வெள்ளிக்கிழமை புனித வெள்ளி. பெங்காலி புத்தாண்டு, ஹிமாச்சஸ் தினம், விஷு போன்ற பண்டிகைகளும் உள்ளன. இந்த நாளில் ஜெய்ப்பூர், ஜம்மு, ஸ்ரீநகர் தவிர மற்ற இடங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
ஏப்ரல் 16: போஹாக் பிஹு சனிக்கிழமை. இந்த நாளில் கவுகாத்தியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஏப்ரல் 17: அனைத்து வங்கிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.


ஏப்ரல் மாதத்தில் 15 நாட்கள் வங்கி விடுமுறை
ஏப்ரல் 1 - வங்கிக் கணக்குகளின் வருடாந்திர மூடல் - (அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை) 
ஏப்ரல் 2 - குடி பத்வா/உகாதி விழா/நவராத்திரியின் முதல் நாள்/தெலுங்கு புத்தாண்டு/சஜிபு நோங்கம்பாம்பா (சைரோபா) - பெலாபூர், பெங்களூர், சென்னை, ஹைதராபாத், இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் விடுமுறை.
ஏப்ரல் 3 - ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 4 - சாரிஹுல்-ராஞ்சியில் விடுமுறை. 
ஏப்ரல் 5 - பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாள் - ஹைதராபாத்தில் விடுமுறை.
ஏப்ரல் 9 - 2வது சனிக்கிழமை
ஏப்ரல் 10 - ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 14 - டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி/ மகாவீர் ஜெயந்தி/ பைசாகி/ தமிழ் புத்தாண்டு/ சைரோபா, பிஜூ விழா/ போஹர் பிஹு - ஷில்லாங் மற்றும் சிம்லாவைத் தவிர மற்ற இடங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை. 
ஏப்ரல் 15 - புனித வெள்ளி / பெங்காலி புத்தாண்டு / ஹிமாச்சல் நாள் / விஷு / போஹாக் பிஹு - ஜெய்ப்பூர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் தவிர மற்ற இடங்களில் விடுமுறை. ஏப்ரல் 16 - போஹாக் பிஹு - கவுகாத்தியில் விடுமுறை. 
ஏப்ரல் 21 - கரியா பூஜை - அகர்தலாவில் விடுமுறை
ஏப்ரல் 23 - நான்காவது சனிக்கிழமை
ஏப்ரல் 24 - ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 29 - ஷப்-இ-கத்ர்/ஜுமாத்-உல்-விடா - ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் விடுமுறை.


மேலும் படிக்க | ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR