Bank Holidays 2021: இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் அக்டோபர் மாதத்தில் மொத்தம் 18 நாட்கள் மூடப்படுகின்றன. வங்கிகள் ஒவ்வொரு மாதமும் நான்கு ஞாயிறு மற்றும் இரண்டு சனிக்கிழமைகளிலும் வழக்கம் போல மூடப்படும். இருப்பினும், வங்கி விடுமுறைகள் எல்லா மாநிலங்களாலும் கடைபிடிக்கப்படுவதில்லை, மேலும் இது ஒவ்வொரு மாநிலத்தின் வழக்கத்தின் படி மாறுபடலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிசர்வ் வங்கியின் (Reserve Bank Of India) விடுமுறை நாட்காட்டியின் படி, வார இறுதி நாட்களைத் தவிர, பண்டிகை விடுமுறைகள் சில உள்ளூர் அல்லது பிராந்திய கிளைகளுக்கு மட்டுமே. பொது விடுமுறைகள் மட்டுமே நாடு முழுவதும் உள்ள வங்கிகளால் அனுசரிக்கப்படுகின்றன. எனவே வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அதற்கேற்ப தங்கள் பரிவர்த்தனைகளைத் திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.


ALSO READ: Warning! வங்கிகளின் இன்று முதல் மாறுதல்கள்; என்னென்ன மாற்றங்கள்? இதோ...


அக்டோபர் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் (Bank holidays list)


  • அக்டோபர் 14 - துர்கா பூஜை/தசரா/ஆயுத பூஜை (அகர்தலா, பெங்களூரு, தமிழ்நாடு, கேங்டாக், கவுகாத்தி, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங், ஸ்ரீநகர், திருவனந்தபுரம் உள்ளிட்ட மாநிலங்களில் விடுமுறை)

  • அக்டோபர் 15 - விஜய தசமி (இம்பால் மற்றும் சிம்லாவை தவிர அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை)

  • அக்டோபர் 16 - துர்கா பூஜை (தஷைன்) - கேங்டாக்கில் வங்கி விடுமுறை

  • அக்டோபர் 17 - ஞாயிறுக்கிழமை

  • அக்டோபர் 18 - கதி பிஹு (கவுகாத்தி)

  • அக்டோபர் 19 - நபிகள் நாயகம் பிறந்த நாள் (அகமதாபாத், பெலாப்பூர், போபால், தமிழ்நாடு, டேராடூன், ஐதராபாத், இம்பால், ஜம்மு, கான்பூர், கொச்சி, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராய்பூர், ராஞ்சி, ஸ்ரீநகர், திருவனந்தபுரம்)

  • அக்டோபர் 20 - மகரிஷி வால்மீகியின் பிறந்த நாள்/லட்சுமி பூஜை/ஐடி-இ-மிலத் (அகர்தலா, பெங்களூரு, சண்டிகர், கொல்கத்தா, சிம்லா)

  • அக்டோபர் 22 - வெள்ளிக்கிழமை ஈத்-இ-மீலாத்-உல்-நபி (ஜம்மு, ஸ்ரீநகர்)

  • அக்டோபர் 23 - நான்காவது சனிக்கிழமை

  • அக்டோபர் 24 - ஞாயிறுக்கிழமை

  • அக்டோபர் 26 - இணைப்பு நாள் - ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் விடுமுறை

  • அக்டோபர் 31 - ஞாயிறுக்கிழமை.


ALSO READ: Post Office: ATM கார்டு, பரிவர்த்தனை தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றம்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR