நியூடெல்லி: 2023ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிப்ரவரி மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்ற தகவல் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆன்லைன் சேவைகள் மூலம் வங்கிச் சேவைகளை நாம் பெற்றாலும், பணம் திரும்பப் பெறுதல் மற்றும் வரைவோலை எனப்படும் டிமாண்ட் டிராஃப்ட் போன்ற வேலைகளுக்கு மக்கள் வங்கிகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால், இந்தத் தகவல்கள் அனைவருக்கும் தேவையானவை ஆகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கி விடுமுறை அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி, தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றுகிறது. அதனால் ஒவ்வொரு மாதத்திலும் வங்கிகள் எந்தெந்த நாட்களில் மூடப்பட்டு இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்துக் கொண்டு செயல்படுவதற்கு ஏதுவாக இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, பிப்ரவரி மாதத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 10 நாட்கள் வங்கிகள் செயல்படாது.


பிப்ரவரி மாதத்தில் எந்தெந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.


மேலும் படிக்க | இவர்கள் ஆதார் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும்! ஆதார் ஆணையம் அறிவுறுத்தல்


பிப்ரவரி 2023 வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்:


பிப்ரவரி 5, 2023 ஞாயிற்றுக்கிழமை - (இந்தியா முழுவதும்)


பிப்ரவரி 11, 2023 இரண்டாவது சனிக்கிழமை - (இந்தியா முழுவதும்)


பிப்ரவரி 12, 2023 ஞாயிற்றுக்கிழமை - (இந்தியா முழுவதும்)


பிப்ரவரி 15, 2023 லுய்-நகை-நி - (ஹைதராபாத்)


பிப்ரவரி 18, 2023 மகாசிவராத்திரி - (அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, ஹைதராபாத், கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா, திருவனந்தபுரம்)


பிப்ரவரி 19, 2023 ஞாயிற்றுக்கிழமை - (இந்தியா முழுவதும்)


பிப்ரவரி 20, 2023 ஒரு மாநில நாள் - (ஐஸ்வால்)


பிப்ரவரி 21, 2023 லோசர் - (காங்டாக்)


பிப்ரவரி 25, 2023 மூன்றாவது சனிக்கிழமை - (இந்தியா முழுவதும்)


பிப்ரவரி 26, 2023 ஞாயிற்றுக்கிழமை - (இந்தியா முழுவதும்)


வங்கி விடுமுறை நாட்களிலும் இணையம் மற்றும் மொபைல் பேங்கிங், பணப் பரிமாற்றங்களுக்கான யூபிஐ, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் பயன்பாடு போன்ற இதர வசதிகளும் உங்களுக்கு கிடைக்கும்.


மேலும் படிக்க | வங்கி லாக்கர் ஒப்பந்தம் தொடர்பாக ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ