துணிவு படத்தை பார்த்து வங்கியை கொள்ளை அடிக்க முயற்சி!

பட்டப் பகலில் வங்கியில் புகுந்து கொள்ளை முயற்சி செய்த வாலிபரை பொதுமக்கள் மற்றும் போலீசாரால் சிறைபிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.    

Written by - RK Spark | Last Updated : Jan 24, 2023, 11:48 AM IST
  • துணிவு பட பாணியில் கொள்ளை முயற்சி.
  • திண்டுக்கல்லில் இளைஞர் வங்கியை கொள்ளை.
  • போலீசார் கைது செய்து விசாரணை.
துணிவு படத்தை பார்த்து வங்கியை கொள்ளை அடிக்க முயற்சி! title=

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பேகம்பூர் பூச்சி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த கலீல் ரகுமான் (25) வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற போது, பொதுமக்கள் மற்றும் வங்கி காவலாளி பிடித்து போலீஸ் இடம் ஒப்படைத்துள்ளனர்.  திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது.  இந்த வங்கியின் இன்று காலை ஒரு இளைஞர் மிளகாய் பொடி பேப்பர் ஸ்பிரே, கட்டிங் பிளேடு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்து மிளகாய் பொடி தூவி ஸ்பிரே அடித்துள்ளார்.  வங்கியில் மூன்று நபர்கள் பணி செய்து வந்த நிலையில் 3 வங்கி ஊழியர்களையும் பிளாஸ்டிக் டேக்யை வைத்து கையை  கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட முயன்ற போது,  வங்கி ஊழியர் ஒருவர் வெளியே வந்து பொதுமக்களை கூச்சலிட்டு அழைத்ததால் பொதுமக்கள் மற்றும் வங்கி காவலாளி  உதவியுடன் காவல்துறையினரிடம் கொள்ளையனை பிடித்து ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க | ஈரோடு இடைத்தேர்தல்: மகனுக்கு பதிலாக களமிறங்கிய ஈவிகேஎஸ்..! எதிர்கட்சிகளுக்கு வைத்த செக் 

bank

மேலும் திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் கொள்ளையனை தீவிர விசாரணை செய்த போது, திண்டுக்கல் பேகம்பூர் அருகே உள்ள பூச்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த கலீல் ரகுமான் (25) என்பதும் சினிமாவை பார்த்து தான் கொள்ளையடிக்க முயற்சி செய்ததாகவும் தற்போது வந்துள்ள துணிவு படம் உட்பட அனைத்து படங்களையும் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும், மேலும் வாழ்க்கை வெறுத்து விட்டதாகவும் காவல்துறை விசாரணையில் கூறியுள்ளார்.  

ban

மேலும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நகர் மேற்கு காவல் நிலையம் நேரில் வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற இளைஞரிடம், இவருடன் சேர்ந்து வேறு யாரும் இந்த கொள்ளை முயற்சிக்கு உடந்தையாக உள்ளார்களா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.  பகல் நேரத்தில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் சாலையில் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்ததால் பொதுமக்கள் மத்தியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | திருப்பதி செல்லும் பக்தர்கள் இதை தெரிஞ்சுக்காம போகாதீங்க..! கட்டணங்கள் உயர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News