வங்கிகளுக்கு அக்டோபர் மாதத்தில் கிட்டத்தட்ட 21 நாட்கள் விடுமுறை விடப்பட்டு இருந்தது. ஆனால் அக்டோபர் மாதத்தை போல் அல்லாமல் இப்போது நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 10 நாட்கள் மட்டுமே விடுமுறைகள் வழங்கப்பட்டு இருக்கிறது.  அக்டோபர் மாதத்தில் பெரும்பாலான பண்டிகைகள் முடிந்துவிட்டது, அதனாலேயே இந்த மாதத்தில் குறைவான நாட்கள் விடுமுறை உள்ளது, கன்னட ராஜ்யோத்சவா, குருநானக் ஜெயந்தி/கார்த்திகை பூர்ணிமா/ரஹஸ் பூர்ணிமா போன்ற சில பண்டிகைகள் நவம்பர் மாதத்தில் வரும், இந்த 10 நாட்கள் விடுமுறையில் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிறுகளும் அடங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு இரண்டாவது சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறைகளை தவிர்த்து நவம்பர் மாதத்தில் 1,8,11, மற்றும் 23 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவித்துள்ளது.  கன்னட ராஜ்யோத்சவா/குட், குருநானக் ஜெயந்தி/கார்த்திகை பூர்ணிமா/ரஹஸ் பூர்ணிமா ஆகிய நாட்களில் பல நகரங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.  அனைத்து வங்கிகளும் குடியரசு தினம், காந்தி ஜெயந்தியை அனுசரிக்கும் போது, ​​சில வங்கிகள் பிராந்திய விழாக்கள் மற்றும் விடுமுறை நாட்களை கடைபிடிக்கின்றன.  அந்தந்த மாநில அரசாங்கங்களால் உள்ளூர் விடுமுறைகள் வங்கிகளில் தீர்மானிக்கப்படுகின்றன.


மேலும் படிக்க | NPS: பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்; ₹64,000 ஓய்வூதியம் தரும் சூப்பர் திட்டம்!



நவம்பர் மாத வங்கி விடுமுறை நாட்கள் :


நவம்பர் 1, 2022: கன்னட ராஜ்யோத்சவா/குட்: கர்நாடகா, மணிப்பூரில் வங்கிகளுக்கு விடுமுறை.


நவம்பர் 8, 2022 : குருநானக் ஜெயந்தி/கார்த்திகை பூர்ணிமா/ரஹஸ் பூர்ணிமா: திரிபுரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, சிக்கிம், அசாம், மணிப்பூர், கேரளா, கோவா, பீகார் மற்றும் மேகாலயா தவிர்த்து மற்ற வங்கிகளுக்கு விடுமுறை.


நவம்பர் 11, 2022 : கனகதாச ஜெயந்தி/வாங்கலா விழா: கர்நாடகா, மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை.


நவம்பர் 23, 2022 : செங் குட்ஸ்னெம் அல்லது செங் குட் ஸ்னெம்: மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை.


மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை! கிராஜூட்டி, ஓய்வூதியம் பறிக்கப்படலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ