2023ம் ஆண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் நிறைவடையவுள்ளது, பிப்ரவரி மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.  பிப்ரவரி மாதத்தை தொடர்ந்து வரப்போகும் மார்ச் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட மொத்தம் 12 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது.  பிப்ரவரி மாதத்தை காட்டிலும் மார்ச் மாதத்தில் கூடுதலாக இரண்டு நாட்கள் விடுமுறைகள் உள்ளது.  மார்ச் 2023ல், ரிசர்வ் வங்கியின் காலண்டரின்படி வங்கி விடுமுறைகள் காரணமாக தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.  ரிசர்வ் வங்கி காலண்டர் மட்டுமின்றி குறிப்பிட்ட மாநிலத்தின் பிராந்திய விடுமுறை நாட்களின் அடிப்படையில் அனைத்து பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகள் மூடப்படலாம். அந்தந்த மாநில அரசாங்கங்களால் வங்கிகளுக்கு உள்ளூர் விடுமுறைகள் தீர்மானிக்கப்படுகிறது, இந்த விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 8th Pay Commission: காத்திருக்கும் குட் நியூஸ், மத்திய அரசு ஊழியர்களுக்கு மாபெரும் சம்பள உயர்வு



மார்ச் மாதத்தில் முதல் வங்கி விடுமுறை மார்ச் 3 அன்று தொடங்குகிறது மற்றும் குடி பத்வா/உகாதி பண்டிகை/பீகார் திவாஸ் போன்ற பிற விடுமுறைகள் மார்ச் 22 அன்று வருகிறது.  ரிசர்வ் வங்கி தனது காலண்டரின்படி மார்ச் 3, 7, 8, 9, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவித்துள்ளது.  இது தவிர, மார்ச் 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் அதாவது மார்ச் 11 மற்றும் 25 ஆகிய நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  ரிசர்வ் வங்கியின் காலண்டரின்படி, மார்ச் 2023-ல் வங்கிகளுக்கு ஆறு நாட்கள் விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. 


வங்கி விடுமுறை நாட்கள்:


மார்ச் 3 - சாப்சார் குட்


மார்ச் 5 - ஞாயிறு


மார்ச் 7 - ஹோலி/ஹோலி (இரண்டாம் நாள்)/ஹோலிகா தஹன்/துலாண்டி/டோல் ஜாத்ரா


மார்ச் 8 - துலேதி/டோல்ஜாத்ரா/ஹோலி/யோசங் 2வது நாள்


மார்ச் 9 - ஹோலி


மார்ச் 11 - மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை


மார்ச் 12 - ஞாயிறு


மார்ச் 19 - ஞாயிறு


மார்ச் 22 - குடி பத்வா/உகாதி விழா/பீகார் திவாஸ்/சாஜிபு நோங்மபான்பா (செய்ராபா)/தெலுங்கு புத்தாண்டு தினம்/1வது நவராத்ரா


மார்ச் 25 - நான்காவது சனிக்கிழமை             


மார்ச் 26 - ஞாயிறு


மார்ச் 30 - ஸ்ரீராம நவமி


சிரமத்தை தவிர்க்க மேலே கூறப்பட்டுள்ள நாட்களில் நீங்கள் வங்கிகளுக்கு செல்ல வேண்டாம்.  இந்த நாட்களில் வங்கிகள் மூடப்பட்டு இருந்தாலும் ஏடிஎம்கள், பண டெபாசிட், ஆன்லைன் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகளில் எந்த பாதிப்பும் இருக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி, இந்நாளில் வட்டி பணம் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ